October 24, 2021

விளக்கேற்ற பயன்படுத்தும் எண்ணெயை சமையல் எண்ணெயாக விற்பனை? ஐகோர்ட்டில் வழக்கு

சமையல் எண்ணெய்யில் 20% சதவிகித அளவிற்கு பிற உணவு எண்ணெய்களை சேர்த்து Blended vegetable Oil என்ற பெயரால் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமையல் எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய்களை அவ்வாறு சேர்க்கும் போது சேர்க்கப்பட்ட ஒரு எண்ணெயின் அளவு 20% அளவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

oil feb 27

2. இத்தகைய எண்ணெய் பாக்கெட்டுகள் “அக்மார்க்” தர குறியீட்டுடன் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் எவ்வளவு சதவீத அளவிற்கு மற்ற எண்ணெய்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது லேபிளில் குறிப்பிடப்பட வேண்டும்.

3. எண்ணெய் பாக்கெட்டுகள் மேற்கூறியவாறு “கலக்கப்பட்ட வெஜிடேபிள் சமையல் எண்ணெய்” என்பதை லேபிளில் வெளிப்படையாக உறுதி செய்ய வேண்டும். லேபிளில் உண்மைக்கு மாறான குறியீடோ அல்லது படமோ இடம் பெறக்கூடாது.

4. எண்ணெய் பாக்கெட்டுகளில் கீழ்கண்ட குறியீடுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

ä எண்ணெயின் பெயர்

ä உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி

ä பேட்ச் எண்

ä எண்ணெயின் எடை(Weight)/ கொள்ளளவு (Volume)

ä உற்பத்தி செய்யப்பட்ட நாள்

ä சிறந்த பயன்பாட்டு நாள்

ä வெஜிடேரியன் குறியீடு

ä உணவுப்பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2011ன்- படி குறிப்பிடப்பட வேண்டிய சட்ட ரீதியான உறுதிமொழிகள்.

5. “ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் இல்லை” என்ற சட்ட ரீதியான உறுதியினை லேபிளில் கொண்டிருக்க வேண்டும்.

6. உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி உண்மைக்கு புறம்பாக லேபிள் அச்சிட்டு விற்பனை செய்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும். இந்நிலையில் விளக்கேற்ற பயன்படுத்தும் கலப்பட  எண்ணெயை சமையல் என்ணெய் என்று விற்பதை தடுக்க ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்   என்று  ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது.

மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த எம்.விக்கிரமங்கலம் என்ற சிதம்பரம் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ அலங்காநல்லூரி்ல் சமையலுக்காக பலர் கடைகளில் நல்லெண்ணெய் வாங்குகின்றனர். தரமான நல்லெண்ணெய் விற்பதற்குப் பதிலாக விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் கலப்பட்ட நல்லெண்ணெயை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். கலப்பட நல்லெண்ணெய் சமையலுக்கு உகந்தது அல்ல. இதை பயன்படுத்தினால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

சில நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் விளக்கேற்ற உதவும் எண்ணெயை நல்லெண்ணெய் என்ற பெயரில் பொதுமக்களிடம் விற்கின்றனர். சில நிறுவனங்கள், வியாபாரிகளின் நியாயமற்ற வர்த்தக நோக்கத்துடன் பொதுமக்களின் உயிருடன் விளையாடுகின்றனர். இதை தடுக்க வேண்டிய உணவு கலப்பட தடுப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

கலப்பட எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட அரிசி, தவிடில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சமையலுக்கு நல்லதல்ல. வெளி உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நல்லெண்ணெய் எள்ளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எள்ளை தவிர வேறு எந்த பொருளும் உண்மையான நல்லெண்ணெயில் கலக்கப்படுவதில்லை. உண்மையான நல்லெண்ணெய் உடலுக்கு நல்லது. ஆயுர்வேதம், யுனானி, சித்தா மருந்து தயாரிப்பில் நல்லெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் தவிர்த்து பிற எண்ணெய்களில் கலப்படம் நடைபெறுகிறது. எனவே விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் கலப்பட எண்ணெய்களில், நல்லெண் ணெய் என்ற வார்த்தையை பயன்படுத்தவும், இந்த எண்ணெய் சமையலுக்கு உகந்தது அல்ல எனக் குறிப்பிடவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.முத்துவேலன் வாதிட்டார். விசாரணைக்குப்பின் மனுதாரரின் புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒரு மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உணவு கலப்பட தடுப்பு பிரிவினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்