நாட்டையே அதிர வைக்கும் கொடூர சம்பவங்கள் இன்றைக்கும் அவ்வப்போது நடந்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 14-ம் தேதி அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், போலீசார் அவர்கள் மீது “தாக்குதல்” வழக்காக மட்டும் பதிவு செய்துவிட்டு, அப்பெண்ணின் மருத்துவ மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். தொடர்ந்து புகார்கள் எழுந்த பின் இளம் பெண்ணிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் கள் வெளியிட்டுள்ள தகவல்படி ”விதிகளின்படி பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் மருத்துவ மாதிரிகள் 96 மணி நேரத்திற்குள் அனுப்பப்பட வேண்டும்.ஆனால், இந்த இளம் பெண்ணின் மாதிரிகள் 11 நாட்களுக்கு பின் தான் கிடைத்தது. எனவே அதில் பலாத் காரத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. தாமதமான மருத்துவ அறிக்கையின் மூலம் எந்த பலனும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், அப்பெண் செப்டம்பர் 22-ம் தேதி போலீசாரிடம் நினைவு திரும்பியபோது வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதை மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக பெண்ணின் உடல் கூட போலீசாரால் அவசர அவசரமாக கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் ‘ஐ.ஜி.எஸ். 7′ என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான…
கோலிவுட் அல்லது பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் சினிமா ரசிகனைக் கூட மூளை இல்லாதவனாகவே யோசித்து கதை, திரைக்கதை எல்லாம் கோர்த்து…
முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய கலவரங்களினால் உந்தப்பட்டு, இஸ்லாமிய மதவெறியன் ஒருவனால் கொடூரமான கொலை முயற்சிக்கு உள்ளான சல்மான் ருஷ்டி மீண்டு…
ரயில் பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையச் சந்திப்புகள் (ஜங்ஷன்) மற்றும் ரயில் நிலையங்களில் உரிமம்…
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படம்…
வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் கண்டறிந்து ஆவனப்படுத்த முன் வர வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி…
This website uses cookies.