ட்ராய் தலைவர் சர்மா கணக்கில் ஒத்தை ரூபாய் டெபாசிட் செய்த ஹேக்கர்கள்!

ட்ராய் தலைவர் சர்மா கணக்கில் ஒத்தை ரூபாய் டெபாசிட் செய்த ஹேக்கர்கள்!

இந்தியர்கள் அனைவருக்கும் அத்தியாவசியம் என்று சொல்லப்படும் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறது என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் அதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. இதையடுத்து, இந்நிலையில் “ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் அந்த எண் தொடர்பான தகவல்களை திருடுங்கள் பார்ப்போம்” என இந்திய தொலை தொடர்பு ஆணையரான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா சவால் ஒன்றை விடுத்தார். ட்விட்டரில் 12 இலக்க ஆதார் எண்ணையும் அவர் வெளியிட்டார்.

ஆர்.எஸ்.சர்மா ஆதார் எண்ணை பதிவிட்ட சில மணிநேரத்திலேயே ஹேக்கர்ஸ் அவரது மொபைல் எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் அவர் பயன்படுத்தும் மற்றொரு மொபை எண் ஆகியவற்றை வரிசையாக வெளியிட்டனர். இந்நிலையில், R.S.ஷர்மா இது பொய்யான தகவல்கள் என கூற. ஹேக்கர்ஸ் அவரது டிமேட் கணக்கின் எண், அதில் அவரது மூன்று வருட பேமெண்ட் செய்ததற்கான கணக்கு வழக்குகளை எடுத்து காட்டினார்கள், வலதுசாரி இணையதளங்களுக்கு எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியது, ஆதார் கார்டு பயன்படுத்தி ஜூலை 2 ஆர்கானிக் பொருட்களை குறிப்பிட்ட நிறுவனம் மூலமாக விற்றது முதல் கொண்டு ஹேக்கர்கள் வெளியிட்டனர்.

அது மட்டுமின்றி, ஹேக்கர்ஸ் ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா-வின் வங்கிக்கணக்கில் BHIM மற்றும் Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி ஒரு ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். இதை கண்ட ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா நான் ஸ்டாப் மீட்டிங் போட்டு ஆலோசனையில் இருப்பதாக தகவல்!

Related Posts

error: Content is protected !!