எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

பலத்த எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்ற நடை முறையில் பல்வேறு சிக்கலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக அமெரிக்கா வில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அமெரிக்க தயாரிப்புகளுக்கு சலுகைகள் என பல அறிவிப்புகள் வெளியாகின. இதனால் வெளி நாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது அந்நாட்டு அரசு. இதையொட்டி எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் வசிப்பவர்கள் அங்கு பணிபுரிவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சில செல்வாக்குமிக்க அமெரிக்க எம்.பிக்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சில ஐடி நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதாவது அமெரிக்காவில் பணியாற்ற வரும் வெளிநாட்டினருக்கு எச்.1பி விசா வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் வசிக்க எச்-4 விசா வழங்கப்படுகிறது. முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவிகாலத்தில் எச்-4 விசா உள்ளவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. எச் 4 விசா வைத்துள்ளவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எச் 4 விசா வைத்திருக்கும் பலர் தற்போது அமெரிக்காவில் வெற்றிகரமாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற விதிகளில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அதன்படி எச்1பி விசா விதிமுறைகளில் கடும் கட்டுப்பாடு விதித்துள்ள அதிபர் டிரம்ப், தற்போது எச்-4 விசா உள்ளவர்கள் பணிபுரிய அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளார். அதிபர் ட்ரம்பின் இந்த முடிவுக்கு செல்வாக்குமிக்க சில அமெரிக்க எம்.பிக்கள் மற்றும் பேஸ்புக் போன்ற பல ஐடி நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி உட்பட 15 அமெரிக்க எம்பிக்கள் உள் நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் கிர்ஸ்ட்ஜென்.எம். நீல்சனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், “எச் 4 விசா உள்ளவர்களுக்கு பணிபுரிய அனுமதி வழங்கியதன் மூலம் அவர்களின் குடும்ப பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தது. அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. எச்-4 விசா உள்ளவர்கள் பலர் தற்போது தங்கள் பணிகளில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். அவர்களின் திறமையில் அமெரிக்க அரசு நிறைய முதலீடு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் திடீரென்று அவர்களை பணியை விட்டு நீக்குவது சரியல்ல. அவ்வாறு செய்தால் அவர்கள் தங்கள் திறமையை கொண்டு மற்ற நாடுகளில் பணிபுரிய நேரும். அப்படி நடந்தால் அவர்களின் திறமை மற்றும் அனுபவம் அமெரிக்க வர்த்தகத்துக்கு எதிராக மாற வாய்ப்புண்டு என அமெரிக்க எம்.பிக்கள் 15 பேர் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!