February 7, 2023

15வது சட்டப் பேரவையில் ஆளுநர் ரோசய்யா உரை

15வது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு இன்று காலையில் 11 மணிக்கு வந்த கவர்னர் ரோசய்யாவை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து கவர்னர் ரோசய்யா ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். 38 பக்கங்கள் கொண்ட உரையை 38 நிமிடங்கள் வாசித்தார் கவர்னர் ரோசய்யா.

tn hyne 16

கவர்னர் ரோசய்யா உரையின் முக்கிய அம்சங்கள் :

முதல்வர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் 2 வது முறை அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கிட முதல்வர் உறுதி பூண்டுள்ளார். இதன்படி பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அமைதி – வளர்ச்சி- செழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தியுள்ளார். டாஸ்மாக் கடைகள் 500யை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்

இருபத்து நான்கு மணி நேரமும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து, மக்களின் குறைகளைத் தீர்க்கும் சிறப்பான அமைப்பாக ‘அம்மா அழைப்பு மையம்’ உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு, மேலும் வலுப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பொதுச் சேவை மையங்கள், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் அரசின் சேவைகளை அளித்து வருகின்றன.

இச்சேவைகளை மேலும் வலுப்படுத்த, தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராமப்புற வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றால் நடத்தப்படும் பொதுச் சேவை மையங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து அரசுத் துறைகளின் சேவைகளும் மக்களுக்கு எளிதில் சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுச் சேவைகள் மக்களிடம் எளிதில் சென்றடைவதற்கான இத்தகைய முன்முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையினை மேன்படுத்த உறுதி கொண்டுள்ள இந்த அரசு, லோக்பால் சட்டத்தில் குறிப்பிட்ட சட்டத்திருத்தங் களுக்கு பாராளுமன்றம் சட்டம் இயற்றியவுடன், உரிய சட்ட வரைமுறையை வகுத்து, தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பை நிறுவும்.

நிதி ஆதாரப் பகிர்வு மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கக்கூடிய இச்சூழ்நிலை யில், ஏற்றுள்ள பொறுப்பு களுக்கு போதிய நிதி ஆதா ரங்களின்றி மாநில அரசு செயல்பட வேண்டியுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல் படும் அதே வேளையில், மத்திய அரசு மற்றும் மாநிலங் களுக்கிடையே நியாயமான நிதிப் பகிர்வுமுறை கடை பிடிக்கப்பட வேண்டும் என இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தன் மூலமாக முதல்- அமைச்சரால் துவங்கப்பட்ட தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023 ஆவணத்தில் வரையறுக்கப்பட்டுள்ள லட் சிய இலக்குகளை நோக்கி தமிழ்நாட்டை இட்டுச் செல்வதற்கு மேலும் ஒரு அரிய வாய்ப்பு இந்த அரசுக்கு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க் கைத்தரத்தை அளிப்பதில் உறுதி கொண்டுள்ள இந்த அரசுக்கு, தொடர்ந்து திட்டங்களைச் செயல்படுத்த 2023 தொலை நோக்குத் திட்டமே செயல் திட்டமாக அமையும், நாட்டிலேயே முதன் முறையாக, நிதி ஆதா ரங்களை வகுத்து ஒருங் கிணைத்து திட்டங்களுக்குப் பயன்படுத்த அமைப்பு சார்ந்த வரைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவாக திட்டங்களைச் செயல்படுத்திட இவை வழி வகுக்கும்.

அண்மையில் பெய்த பலத்த மழையாலும் பெரு வெள்ளத்தாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக சென்னை மாநகரிலும் சில கடலோர மாவட்டங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. முதல்&அமைச்சரின் தலைமையின்கீழ் பல்வேறு அரசு அமைப்புகள் மேற் கொண்ட சிறப்பான நடவடிக் கைகளால், பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் ஆறுதல் பெற்றதுடன், இயல்பு வாழ்க்கைக்கும் விரைவாகத் திரும்பினர்.

வரும் காலங்களில் இது போன்ற வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தணிக்க, சென்னையிலும், பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய கடலோர மாவட்டங்களிலும் விரிவான வெள்ளத் தடுப்புத் திட்டங் களை இந்த அரசு விரைவாகத் தயாரிக்கும்.