October 25, 2021

கார்கில் போரில் தந்தையை இழந்த பெண்ணால் ட்விட்டர் களேபரம்!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு போர் மூண்டது. 2 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும், இந்தப் போரில் அதிகாரிகள், படைவீரர்கள், வீரர்கள் என 490 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனாலும் இந்த வெற்றியை இந்தியா ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

kaekil feb 27

இந்நிலையில் அந்த கார்கில் போரில் இழந்தவரின் மகள் குர்மெகர் கவுர் இவர் புதுடெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் படித்து வருகிறார் இந்த பெண் இவர் சமூக வலைதளமான் டவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் அதில், பாகிஸ்தான் என் தந்தையை கொள்ளவில்லை, அவசியமில்லாத போரால்தான் என் தந்தை உயிரிழந்தார். இந்த பிரச்சனையை பேசி தீர்த்திருந்தால் என்னை போன்ற பலர் தந்தையோடு இருந்திருப்பார்கள்’ என உருக்கமாக அந்த பெண் அட்டையில் எழுதிய வார்த்தையில் கூறியிருந்தார். இதற்கு பாரதீய ஜனதாவின் மாணவர் பிரிவு ஏபிவிபி அவரை பாலியல் பலாதகாரம் செய்து விடுவதாக மிரட்டியது.

மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்ட கிரிக்கெட் வீரர் சேவாக், தாம் இரு முறை முச்சதம் அடிக்கவில்லை என்றும், தமது பேட் தான் அடித்தது என்றும் எழுதிய வாசகங்ககளை பிடித்த படி போஸ் கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் சேவாக்குக்கு எதிர்ப்பு எழுந்த போது ஒருபுறம் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் ABVP யினரின் இந்த செயலை கண்டித்து கவுர் தனது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். லேடி ஸ்ரீ ராம் கல்லூரி மாணவியான குர்மெஹர் கவுர் ஒரு புகைப்படத்தை பகிருந்திருந்தார். அதில் அவரது கையில் ஒரு பதாகையை பிடித்திருந்தார். அந்த பதாகையில், “நான் டில்லி பல்கலைகழக மாணவி. நான் ABVP யை கண்டு அஞ்சவில்லை. “நான் தனியாக இல்லை. இந்தியாவின் அனைத்து மாணவர்களும் என்னுடன் உள்ளனர். #StudentsAgainstABVP” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ, “யார் இந்த் இளம் பெண் மனதை கெடுத்தது. ஒரு வலுவான படை போரை தடுக்கிறது.இந்தியா யாரையும் தாக்கியது இல்லை. ஆனால் இந்தியா பலவீனமானது என்று கருதி எப்போதும் படையெடுத்தனர்” என கூறி உள்ளார்.இதையடுத்து தற்போது இளம் பெண் குர்மெகர் கவுருக்கு ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.