October 16, 2021

ஜிஎஸ்டி ரியாக்‌ஷன் : டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி போன்றவற்றுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதி்ப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி எனப்படும்  சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வரி விதிப்புகள் அனைத்தும்  இறுதி செய்யப்பட்டு விட்டன. ஜிஎஸ்டியை பொறுத்தவரை டிவி மற்றும் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் பாகங்களை பொறுத்து வரி  வேறுபடுகிறது. சில 18 சதவீத வரியிலும், சில 28 சதவீத வரியிலும் வருகின்றன. லேப்டாப் மற்றும் டிவிக்களுக்கு 26.5 சதவீத வரி உள்ளது. சில  கம்ப்யூட்டர் பாகங்களுக்கு 10.3 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

எனவே ஒட்டுமொத்த அளவில் இவற்றின் விலை சிறிதளவு உயரலாம் என இத்துறையினர் தெரிவிக்கின்றனர். எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட  நுகர்வோர் சாதனங்கள் சில 23 சதவீத வரி விதிப்பில் உள்ளன. தற்போதைய ஜிஎஸ்டி வரியுடன் ஒப்பிடும்போது சில பொருட்கள் 4 முதல் 5 சதவீதம்  அதிகரிக்கும். ஆனால் குளிர்சாதனப்பெட்டி உட்பட பல வீட்டு உபயோக பொருட்கள் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க, தீபாவளிக்கு முன்பே தள்ளுபடியை நிறுவனங்கள் அள்ளித்தெளிக்க தொடங்கி விட்டன. இதன்படி சில்லரை விற்பனையில்  ஈடுபடும் வர்த்தகர்கள் பலர் தள்ளுபடி யை தாராளமாக வழங்கி வருகின்றனர். வழக்கமாக தள்ளுபடி விற்பனை தீபாவளி சமயத்தில்தான் இருக்கும்.  அப்போது அதிகபட்ச சில்லரை விலையில் இருந்து சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதை விட தற்போது 2 முதல் 3  மடங்கு வரை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வீட்டு உபயோக பொருள் தயாரிக்கும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த 3ம் தேதி கூட்டத்தில், வரி  கிரெடிட் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ருந்தாலும் ஏற்கெனவே பொருட்களை கொள்முதல் செய்து வைத்துள்ள சில்லரை  வர்த்தகர்கள், மத்திய அரசின் 40% வரியை ஏற்க முடியாது. இது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். எனவே, தங்களிடம் உள்ள பொருட்களை  விற்று தீர்க்கவே அவர்கள் முனைப்பு காட்டுகின்றனர் என்றார்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போதுதான் வழக்கமாக தள்ளுபடி அறிவிக்கப்படு–்ம். ஜிஎஸ்டி அமல் தேதிக்கு பிறகுதான் தீபாவளி  வருகிறது. ஆனால் அதுவரை ஸ்டாக்குகளை வைத்திருக்க முடியாது. எனவேதான் சில்லரை வியாபாரிகள் தற்போது தள்ளுபடி அறிவித்து  வருகின்றனர். சில பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஷோரூம்களில் பிரமாண்ட தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளன. சிலர் 40  சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கின்றனர். சிலர் 50 சதவீதம் வரை அளிக்கின்றனர்.

எவ்வளவு பொருட்களை விற்று தீர்த்தாலும் ஜூலை மாதத்தில் விற்பனை சற்று பாதிக்கவே செய்யும். சில பெரிய சில்லரை வியாபாரிகள் 100 கோடி  ரூபாய்க்கு மேல் பொருட்களை ஸ்டாக் வைத்துள்ளனர். இவர்கள் இந்த மாதத்துக்குள் விற்றுத்தீர்ப்பது எப்படி என்று தெரியாமல் தவிக்கின்றனர்.  இதனால் தள்ளுபடிகளை தாராளமாக அறிவித்து வருகின்றனர். அதிக விலையுள்ள வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு சரியான தருணம்  இது என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். வர்த்தகர் ஒருவர் கூறுகையில், ஜிஎஸ்டிக்கு முன்பாக ஸ்டாக் தீர்க்க அதிரடி தள்ளுபடியில் விற்று  வருகிறோம். இதனால் நஷ்டம்தான். அதேநேரத்தில், தீபாவளிக்கு முன்பாகவே ஜிஎஸ்டிக்காக தள்ளுபடியில் பொருட்களை விற்பதால், இதை தொடர்ந்து  ஜூலையில் விற்பனையை  பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது என்றார்.