43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும்28ம் தேதி கூடுகிறது!

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும்28ம் தேதி கூடுகிறது!

“கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்”- பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 43வது கூட்டம் வரும் மே 28ம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் கூடும் என்று மத்திய நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி கூடிய நிலையில் தற்போது மே 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்பார்கள் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது போன்ற பல நிலுவையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவிட் தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்வது, கோவிட் தொடர்பான முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது போன்ற கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!