பங்கு சந்தையில் பாய்ச்சல் காட்டும் கிரீன் சிக்னல் பயோ பார்மா பப்ளிக் லிமிடெட்!

பங்கு சந்தையில்  பாய்ச்சல் காட்டும்  கிரீன் சிக்னல் பயோ பார்மா பப்ளிக் லிமிடெட்!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிரீன் சிக்னல் பயோ பார்மா பப்ளிக் லிமிடெட் (GreenSignal Bio Pharma Ltd’s) நிறுவனமானது வரும் அக்டோபர் மாதம் 26-ந் தேதி துவங்கி அக்டோபர் 28-ந் தேதி வரை குறிப்பிட்ட அளவிலான பங்குகளை முதல்முறையாக பட்டியலிடுகிறது. அதன்மூலம் ஏறத்தாழ 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறது. இந்நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும், ஊக்குவிப்பாளர்களாகவும் இருந்து வரும் சுந்தர பரிபூரணன் மற்றும் முரளி மற்றும் இன்னபிற பங்குதாரரர்களான ஏவான் சைக்கிள்ஸ் லிமிடெட் ஆகியோர் 1,45,79,560 சமபங்குகளை 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளை ஒரு பங்கிற்கு 80 ரூபாய் வரையிலான தோராய உத்தேச மதிப்பு விலையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பங்கில் 38 சதவிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ad oct 16

கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனமானது இரண்டு மிக முக்கிய நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்கிறது. ஒன்று பச்சிளம் சிசுக்களை புற்றுநோயின் பிடியில் இருந்து மீட்க பயன்படும் பிசிஜி நோய்தடுப்பு மருந்து( BCG vaccine ) மற்றொன்று பிசிஜி – ஓஎன்சிஓ (BCG-ONCO ) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படும் மருந்து. இதில் பிசிஜி – ஓஎன்சிஓ (BCG-ONCO ) எனப்படும் மருந்தானது சிறுநீரக பையில் ஏற்படக் கூடிய புற்றுநோய் தடுப்பில் முக்கிய பங்காற்றுகிறது. 2016 மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 82.73 சதவிதமானது பிசிஜி நோய்தடுப்பு மருந்து( BCG vaccine ) விற்பனையில் மூலம் கிடைத்தது.

யுனிசெப் (UNICEF) என்ற ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கு பிசிஜி நோய்தடுப்பு மருந்தை ( BCG vaccine ) விற்பனை செய்ய உலக சுகாதார அமைப்பான WHO அமைப்பின் முன்தகுதி பெற்ற நான்கு நிறுவனங்களில் கிரீன் சிக்னல் பயோ பார்மா பப்ளிக் லிமிடெட் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. யுனிசெப் கோரும் ( BCG vaccine ) நோய் தடுப்பு மருந்துகளை அவற்றின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து கொடுப்பதற்கான நீண்டகால தயாரிப்பு பணிகளில் இந்நிறுவனம் திறம்பட செயலாற்றி வருகிறது.

யுனிசெப் அமைப்பின் வரம்பிற்கு உட்படாத இந்தோனேஷியா, நேபாளம் போன்ற நாடுகளுக்குக் கூட ( BCG vaccine ) மருந்தை கிரீன் சிக்னல் பயோ பார்மா பப்ளிக் லிமிடெட் நிறுவனம் விநியோகித்து வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதைக் காட்டிலும் அயல்நாடுகளில் மும்மடங்கு விலை வைத்து இந்த நோய் தடுப்பு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் அயல்நாட்டு தேவைகளை பொறுத்து இவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படும்.

மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் முதல்முறையாக பட்டியலிடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய ஆதாயம் இந்நிறுவனத்திற்கு கூடுதல் நற்பெயரை பெற்றுத் தரும். இதன் வாயிலாக 14,579,560 சமபங்குகளை அதன் பங்குதாரர்கள் விற்பனை செய்ய உள்ளனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தான் இதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் BRLM ஆகும்.

Related Posts

error: Content is protected !!