September 18, 2021

பெண்களின் விழிப்புணர்வுக்காக 260 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் பட்டதாரி பெண்!

பெண்கள் மீதான அடக்குமுறை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் குறிப்பாக தெற்காசிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிலும் பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. வளர்ந்து வரும் மனித நாகரிகமும், அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட புரட்சியினாலும், பல்வேறு தலைவர்களின் போராட்டத்தினாலும் பெண்கள் சமூகத்தில் பல்வேறு உச்சங்களை எட்டியுள்ளனர். அதே சமயம் இந்தியாவில் 2005-இல் 37 சதவீத பெண்கள் பணிக்கு சென் றனர். ஆனால் தற்போதைய கணக்கின்படி 27 சதவீதம் பேர்களே பணிக்கு செல்கின்றனர். பெண்களுக்கு கல்வி கொடுக்கும் குடும்பத்தினர் அவரை பணிக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. பாதுகாப்பின்மையே அதற்கு காரணம். புராணங்களில் இருந்து தற் போதுவரை பெண்களின் திறமை, வீரம் வெளிகொண்டு வரப்பட வில்லை. மகளிர் மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரித் தாலும் அது இன்றளவும் நிறை வேற்றப்படவில்லை. உள்ளாட் சியில் 50 சதவீதம் பெண்களுக்கு இடதுக்கீடு செய்பவர்கள் நாடா ளுமன்றத்தில் இடஒதுக்கீடு செய்ய மறுக்கின்றனர். எல்லா சமூகத்திலும் ஒடுக்கப்படுவது பெண்களாகத்தான் உள்ளனர். இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக 260நாள்களில் 3800 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார் ஒரு  பட்டதாரி பெண்.

பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்கான விழிப்புணர்வினை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் ஒரு நடைபயணத்தினை தொடங்கியுள்ளார் நியூடெல்லியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி பெண் சிருஷ்டி பக்சி

நியூடெல்லியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ லெப்டின் ஜெனரல் ஏ.கே.பக்சி, மற்றும் பள்ளி ஆசிரியர் சரக்கா ஆசிரியர் ஆகியோரின் மகள்தான் சிருஷ்டி பக்சி. சிறு வயது முதல் சமூக முன்னேற்றம், பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் என்ன கொண்ட சிருஷ்டி, எம்.பி.ஏ. படித்து முடித்ததும் ஹாங்காங்கில் 1 ஆண்டு பணி புரிந்துள்ளார். அப்போதே தன்னுடைய பணியை விட பெண்களின் முன்னேற்றம் குறித்தும், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ண வந்த நிலையில் தனது எண்ணத்தினை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் சம்மதம் கொடுத்ததை தொடர்ந்து, தனது பணியை உதறி தள்ளிவிட்டு, தனது நடைபயண முயற்சியை தொடங்கியுள்ளார்.

தற்போதைய இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதிபடுத்துவது, சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுப்பது, அதில் இருந்து அவர்களை காப்பாது, அது மட்டுமல்லாது இன்றைய நவீன தொழில் நுட்பங்கள் மூலமாக பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்ற எண்ணங்களை தனது நடை பயணத்தின் நோக்கமாக கொண்டு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை தனது பயணத்தினை தொடங்கியுள்ளார்.

கடந்த 15ந்தேதி சிருஷ்டி கன்னியாகுமரியில் நடைபயணத்தினை தொடங்கினார். தினந்தோறும் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை 260நாள்களில் 3800 கிலோ மீட்டர் தூரம் தனது நடைபயணத்தினை மேற்கொண்டுள்ளார். தமிழகம் வழியாக கர்நாடாக, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியபிரேதசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் வழியாக ஸ்ரீநகரை அடைகிறார். தனது நடைபயணத்தின் போது பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை சந்தித்து தனது எண்ணங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து, தனது பயணத்தின் இறுதியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத்கோவித்தை சந்தித்து தெரிவிக்கவுள்ளார்.

சிருஷ்டி இந்த லட்சிய பயணத்திற்காக அவரது நண்பர்கள 10 பேர் ஆதரவு தெரிவித்து, அவருக்கு ஊக்கமும், உற்சகமும் கொடுக்கும் வகையில் உடன் வருகின்றனர். சிருஷ்டியின் லட்சிய பயணம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமில்லை..