January 28, 2022

கவுசல்யா & சக்தி = அது + இது + எது?

தோழர் கொளத்தூர் மணி, தோழர் தியாகு முன்னிலையில கவுசல்யா, சக்தி அப்புறம் சம்பந்தப்பட்ட பொண்ணுங்க கூட சேந்து பஞ்சாயத்து நடந்துருக்கு. குத்தத்த ஒத்துக்கிட்டா னுங்க... அதாவது இந்த புரட்சி தம்பதிகளால கரு கலைக்கப்பட்ட பொண்ணுக்கு 3 லட்சம் தரதாகவும் 6 தவணையில (இதுக்கு அந்த பொண்ணு ஒத்துக்கல!) 6 மாசத்துக்கு பொதுத்தளத்துல இயங்க கூடாது. இனி நிமிர்வு கலையகத்துக்கு எக்காரணத்த கொண்டும் சக்தி பறை இசைக்க கூடாதுன்னும் முடிவெடுத்துருக்காங்க..

மைனர் குஞ்சி காமெடிதான் நியாபகம் வருது. அட்வான்ஸ் புக்கிங்ல ரேப்பிங் பன்னிட்டுருக்காரு..

6 மாசம் கருவான குழந்தைய பிச்சி எடுத்து, சூசைட் பன்ற அளவுக்கு விரக்திய உண்டாக்கி, அந்த பொண்ணு மோஷன் கூட போக முடியல ரத்தம், வலி, வேதனையோட சேந்த மனஉளச்சல்னு இவ்வளதும் ஏற்படுத்திட்டு இவங்களுக்கு ஹனிமூன் மயிரு கேக்குது…

பெண்கள் உரிமைக்காக தமிழ்நாட்ல இருந்து சபரிமலை வரைக்கும் போய் போராட தெறிஞ்ச மனிதி குரூப்புக்கு, உங்க மனிதி குரூப்லையே ஒரு பொண்ணு இப்டி ஒரு கஷ்டத்த அனுபவிக்கு தேன்னு பேச கூட தோனாம போச்சுல.. இதில்லாம கவுசி-சக்தி திருமணம் புரட்சிகர திருமணம்னு வேற மெச்சிக்கிறிங்க?

இதுல எங்க இருக்கு பெண்ணுரிமை?

அடுத்து “திராவிடர் கழகம்” ஓசூர்ல நடக்குற ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுல இந்த கவுசல்யா-சக்தி புரட்சிகர தம்பதிகளுக்கு பாராட்டு விழா நடத்த போராங்களாம்.

2 மாசம் முன்னாடியே முடிவு பன்னதால இடையில நிறுத்த முடியாதாம்… அப்டி இந்த ஜோடிய ஏத்தி பாராட்டு விழா நடத்துனீங்கனா பெரியார் கொள்கைக்கு இத விட அசிங்கம் எதுவுமில்ல..

கவுசல்யாக்கிட்ட பஞ்சயத்துல உனக்கு எது முக்கியம் கொள்கையா? காதலா? கேட்டதுக்கு.. சக்தியோட காதல்தாங்குறாங்க..

“என்னமா இப்டி சொல்ற”னு கேட்டா காதல்தான் என் பலமும், பலவீனமும்ங்குது..

கவுசல்யா ரொம்ப செல்லமா வளந்த adamant-ஆனா குழந்த..  ஒன்னு வேனும்னா? அது வேனும். அதான் தெரியும்.

சங்கர் வேனும்னா எவ்ளோ எதிர்ப்பு வந்தாலும் எதிர்த்து நின்னது, சக்தி வேனும்ங்குறாதால எத வேனாலும் இழக்குறது..

இந்த பொண்ணு போராளில்லாம் இல்ல. ‘குழந்தை’. எடுப்பார் கைபிள்ளை.. பேசுறதுகூட போன்ல டைப் பன்னி கொடுத்ததான் பேசும்.. இண்டர்வியூ-ல கூட “அம்பேத்கர், பெரியார் கொள்கைல நடப்போம்.” அவ்ளோதான்…

19 வயசுல முதல் கல்யாணம், 21 வயசுல ரெண்டாவது கல்யாணம்..

அந்த பொண்ணு காதலிக்குதுன்னு ஒரே காரணத்துக்காக அவசர அவசரமா யாராவது கல்யாணம் பன்னுவாங்களா?

நானே போய் வசதியா இருக்க பெரியாரிஸ்ட்டுங்க வீட்ல பொண்ணு கொடுனா ஆஹா புரட்சினு சொல்லி கொடுத்துருவாங்களா? நா யாரு எப்டி பட்டவன்னு எல்லா நோண்டுவாங்க.

ஆனா கவுசல்யாக்கு அப்டியில்லா யாரோ வீட்டு பொண்ணுதானே?னு முடிச்சிட்டாங்க..

எனக்கு தெரியும் முற்போக்குவாதிகளின் செல்ல குழந்தைதான் இந்த கவுசல்யா, அந்த பொண்ண பத்தி ஒரு வார்த்த நா பிசிரு தட்ர மாதிரி பேசுனாலும் என்ன “காவி” “RSS ஸ்லீப்பர் செல்-னு” சொல்லிருப்பாங்க..

அதான் எல்லா டீட்டியலும் எடுத்து வச்சிட்டு “Lock” பன்னேன்.

அப்புறம் இந்த சக்தி? இவர பத்தி என்ன சொல்றது? மைனர் குஞ்சு லிஸ்ட்டு பெருசாகிட்டே போய்ட்டுருக்கு…

இவன் என்ன நெனச்சிட்டான்னா? எப்டியும் பொண்ணுங்க “தன்னோட மானத்த காப்பாத்திக்க வாவது” நம்பள பத்தி சொல்லாதுங்க.. ஒரு கான்பிடன்ஸ்ல இருந்துட்டாரு.. -இங்கதான் என்னோட எண்ட்ட்ரி..

மொத்த தலைவர்களையும், பட்டியலின மக்களையும் ரெண்டு பேரும் சேந்து ஏமாத்திருக்குங்க, துரோகம் பன்னிருக்குங்க…

இந்த பிரச்சன முடிஞ்சதால ஆடியோ எதுவும் போட மாட்டேன். அத வச்சிட்டு மீடியாகாரனும், யூடூப் சேனல் காரனும் ரெண்டு நாள் தான் பொழப்ப ஓட்டிப்பானுங்க..

அது ஏங்கிட்டையே இருக்கட்டும்…

அப்புறம் அந்த 3 லட்சம் பணம் சங்கர் அறக்கட்டளைல இருந்து எடுக்க முடியாது, எப்டியும் கவுசி கவுர்மெண்ட் வேலைலருந்து வர சம்பளத்துலதான் கொடுக்க போறிங்க.

அப்பவும் உனக்கு சங்கர்தான் உதவுறான் பாரு..

ரெண்டு நாள்-ல புரட்சிகர தம்பதிங்க அறிக்கை கொடுக்குறாங்கலாம்…

அப்புறம் இந்த விஷ்யமல்லாம் ஏற்கனவே தெறிஞ்சி இருக்குறவங்க “மனஉளச்சல்ல இருக்க அந்த கருகலைச்ச பொன்ன தொந்தரவு பன்னாம இருங்க…” அது போதும்..

திலீபன் மகேந்திரன்