பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இந்தியாவுக்கு 14ஆவது இடம்!

பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இந்தியாவுக்கு 14ஆவது இடம்!

‘பாராளுமன்றம்-சட்டமன்றம்,நீதி, நிர்வாகம் ஆகிய மூன்று தூண்களை கண்காணிக்கவும், இவை கள் உட்பட நாட்டில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும்தான் நான்காவது தூணான பத்திரிகைத் துறையின் கடமை. இங்கு பேச்சு சுதந்திரமும்,கருத்துச் சுதந்திரமும் அடிப்படை ஆனால், சுதந்திரமாகச் செயல்பட முடியாத அளவு சமகாலத்தில் பல அச்சுறுத்தல்களைச் சந்தித்துவருகின்றனர். அரசாலும் ஆளும்கட்சி யாலும் ஊடக சுதந்திரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. களத்தில் பணியாற்றும் ஊடக வியலாளர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அத்துமீறல்கள் ஒரு புறம், ஊழல் அரசியல்வாதிகளாலும் போக்கிலிகளாலும் மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனிடையே உலக அளவில் பத்திரிகை யாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இந்தியா 14ஆவது இடத்தில் இருப்பதாகப் பத்திரிகையாளர் களைப் பாதுகாக்கும் கமிட்டியின் அறிக்கை தெரிவித்து உள்ளது.

வரும் நவம்பர் 2ஆம் தேதி உலகளவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களை இழைப் பவர்கள் தப்பித்துக் கொள்வதற்கு முடிவு கட்டும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் கமிட்டி ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை யில், “உலக அளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட 18 வழக்குகளில் இன்னும் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வகையில் உலகளவில் சோமாலியா, சிரியா, ஈராக், பாகிஸ் தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா 14ஆவது இடத்தில் இருக்கிறது. எங்கெல்லாம் பத்திரிகை, ஊடக குரல்வளை நெறிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது.எங்கெல்லாம் ஒரு பத்திரிகையாளர் கொல்லப் படுகிறாரோ, அங்கெல்லாம் உண்மைகளும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது என்று சீனியர் மீடியாமேன்கள் இன்ரு வரை வருத்தமுடன் சொல்லி வருகிறார்கள்.

மேலும் பத்திரிகையாளர்கள் கொலைகளில் நீதி கிடைக்காமல் இருப்பது மிகக்கடுமையான பத்திரிகை தணிக்கை முறையே. கடந்த 10 ஆண்டுகளில் 324 பத்திரிகையாளர்கள் கொலைகளின் மூலம் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 85 விழுக்காடு வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இது ஊடகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மறைமுகமான தந்திரமாகும்.

உலகளவில் கடந்த 2000இல் இருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் நடந்த பத்திரிகையாளர் கள் கொலைகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நாடுகளில் முதல் நாடாக சோமாலி யாவும் அதனைத் தொடர்ந்து சிரியாவும், ஈராக்கும், தெற்கு சூடானும் மற்றும் பிலிப்பைன்ஸும் உள்ளன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!