பேங்கில் டெபாசிட் செய்வது உங்கள் வருமானமில்லையென தெரிந்தால் 200% ஃபைன்!

பேங்கில் டெபாசிட்  செய்வது உங்கள் வருமானமில்லையென தெரிந்தால் 200% ஃபைன்!

நேற்றிரவு பிரதமர் மோடி திடீர் என ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் என்று அறிவித்த செய்தியை கேட்ட பொதுமக்கள் தங்களிடம் இருந்த அந்த நோட்டுகளை தங்கத்தில் முதலீடு செய்ய நகை கடைகளை முற்றுகையிட தொடங்கினர். வாடிக்கையாளர்கள் நேற்று இரவு பெருமளவு குவிந்ததால் வழக்கமாக 9 மணிக்கு மூடப்படும் நகைக்கடைகள் நள்ளிரவு தாண்டியும் திறந்து உள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

deposit nov 9

அதன்படி வருமானத்திற்கு அதிகமாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் 200 சதவிதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரி பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.வருமானத்திற்கு பொருந்தாத தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும், வருமான வரியுடன் 200 சதவிதம் அபராதம் விதிக்கப்படும். 50 நாட்களில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்வோரின் தகவல்கள் பெறப்படும். ரூ. 2 லட்சம் வரையில் டெபாசிட் செய்யும் சிறு வணிகள் கவலைப்பட தேவையில்லை. நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிவரையில் டெபாசிட் செய்யப்படும் பணம் தொடர்பான தகவல்கள் பெறப்படும். டெபாசிட் செய்யப்படும் தொகையானது, வருமானவரி தாக்கலுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என்று வருவாய் துறை செயலாளர் கூறிஉள்ளார்.

நகைகளை வாங்குவதற்கு பான் கார்டு எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது என்றும் அறிவித்து உள்ளனர். நகை வணிகர்கள் வாடிக்கையாளரிடம் பான் கார்டு எண்ணை கட்டாயம் வாங்க வேண்டும். பான் கார்டு எண்ணை பெறாலம் நகையை விற்பனை செய்யும் நகை கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் சமரசம் செய்யப்படாது என்பதை உறுதிசெய்ய அனைத்து நகைக்கடைகளும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் ஒருவிதமான பதற்றம் நிலவுகிறது. பெருமளவு கருப்பு பணத்தையும், தங்கத்தையும் பதுக்கி வைத்திருக்கிற கருப்பு பண முதலைகள் நிலைமை சிக்கலாகி இருக்கிறது. இந்த நிலையில், வருமான வரித்துறை, தனது புலனாய்வு அமைப்புகளை உஷார்படுத்தி உள்ளது. சந்தேகத்துக்கு இடமான சூழலில் பெருமளவு பணமும், தங்கமும் எடுத்துச்செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி வருமான வரித்துறையின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம், பெரிய அளவில் பணத்தையும், தங்கத்தையும் கையாள்கிற ஹவாலா டீலர்கள், வியாபாரிகள், நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு தனது அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அறிவுறுத்தி உள்ளது. உள்ளூர் போலீஸ் மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவுடனும் இணைந்து செயல்படுமாறும் கூறி உள்ளது. நேற்று இரவில் மேற்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் தங்க சந்தைகளில் தங்கம் அதிகளவில் விற்பனையாகி உள்ளது என்ற தகவல் பேரிலும் வருமான வரித்துறை நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.வங்கிகள், அஞ்சலகங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செலுத்தப்படுவதையும் வருமான வரித்துறையினர் கண்காணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts

error: Content is protected !!