October 21, 2021

பயங்கரவாதி உடலை வாங்க மறுக்கும் தந்தை: ராஜ்நாத்சிங் பெருமை!

மத்திய பிரதேச மாநிலம் ஜாப்தி ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலையில் சென்று கொண்டிருந்த போபால்–உஜ்ஜைனி ரெயிலில் குண்டுவெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் 3 பேரை உடனடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அவர்கள்தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

terro mar 9

உடனே உத்தரபிரதேச போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மாநிலத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதில் கான்பூர் மற்றும் இடாவாவில் 3 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முகமது சைபுல்லா என்ற பயங்கரவாதியை பிடிக்க போலீசார் லக்னோ விரைந்தனர்.ககோரி பகுதியில் உள்ள ஹாஜி காலனியில் சைபுல்லா தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அவரை சரணடையுமாறு வலியுறுத்தினர்.

ஆனால் அவர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் திருப்பி சுட்டதில் சைபுல்லா கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட சைபுல்லாவின் உடல் தற்போது லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவரது உடலை வாங்க கான்பூரில் வசித்து வரும் அவரது தந்தை சர்தாஜ் மறுத்து விட்டார். இது குறித்து சைபுல்லாவின் தந்தை சர்தாஜ் செய்தியாளரிடம் பேசுகையில், இது தேசத்திற்கு நலன் பயிப்பது கிடையாது. தேசத்திற்கு எதிரானவனின் சடலத்தை நாங்கள் வாங்க மாட்டோம். சில மாதங்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்து போனான். வேலை செய்யாத காரணத்தினால் நான் அடித்தேன், அதனால் வீட்டை விட்டு சென்றுவிட்டான். கடந்த திங்கள் கிழமை தொலைபேசியில் பேசியவன் சவுதி அரேபியா செல்வதாக கூறினான் என கூறிஉள்ளார். சைபுல்லாவின் மற்றொரு உறவினர் பேசுகையில், எல்லோரும் அதிர்ச்சி அடைந்து உள்ளோம். மிகவும் நல்ல முறையில் நடப்பவர். ஒரு நாளுக்கு 5 முறை நமாஸ் செய்வார். நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் பேசுகையில் தெரிவித்தார்.