சிறார்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டால் துாக்கு! – மத்திய அரசு முடிவு!
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 2 குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். 8 பேர் கடத்தப் படுகிறார்கள். அதே சமயம் இந்தியாவில் 90% பாலியல் குற்றங்கள் நீதிமன்றத்தின் படி ஏறாமலே போகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு மட்டும், 34,651 பாலியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அதில் கிட்டதட்ட 14, 913 வழக்குகள், பாலியல் வன்முறைக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் பிடிபட்ட பாலியல் குற்றவாளிகளின் பின்னணி பற்றியும், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் இந்தியாவில் பல விவாதங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

இதனிடையே சிறார்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டால் துாக்கு தண்டனை அளிக்கப்படும். அதற்கேற்ப சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்போவதாக ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறி உள்ளார்.நோபல்பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஏற்பாடு செய்த குழந்தைகளை காப்போம் பிரசார திட்ட விழாவில் முதல்வர் சவுகான் பேசுகையில், குழந்தைகைளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளை சகித்துக் கொள்ள முடியாது.
எனவே தான் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர்களை துாக்கில் தொங்க விடும வகையில் சட்டம் கொண்டு வரப்போகிறோம். விரைவில் சட்ட திருத்த மசோதா சட்டசபையில்தாக்கல் செய்யப்படும். அது நிறைவேறியபிறகு ஒப்புதலுக்காக மத்தியஅரசுக்கு அனுப்பிவைப்போம் என்று தெரிவித்தார்.