சிறுவர் சிறுமியர்களுக்கு தடுப்பூசி போடுவதால் பலன் எதுவும் இல்லை! – எய்ம்ஸ் மருத்துவர்!

சிறுவர் சிறுமியர்களுக்கு தடுப்பூசி போடுவதால் பலன் எதுவும் இல்லை! – எய்ம்ஸ் மருத்துவர்!

15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு தடுப்பூசி போடுவது என்று மத்திய அரசு எடுத்திருக்கின்ற முடிவு அறிவியல் பூர்வமானது என்று எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சஞ்சய் கே.ராய் ட்விட்டர் பதிவு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.5 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு தடுப்பூசி போடுவதால் கூடுதல் பலன் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு தொலைக்காட்சியில் உரையாடும் பொழுது சிறுவர் சிறுமியர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து தடுப்பூசி போடப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் நான் அவருடைய தன்னலமற்ற சேவை நாட்டுக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கும் திறன் உடையவர் அவர் ஆனால் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு என்னைப் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி விட்டது.

கடந்த நான்கு ஐந்து மாதங்களாக அமெரிக்கா உள்பட சில நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றன குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் பயன்கள் என்று அந்த நாடுகள் தொகுத்துள்ள புள்ளிவிவரங்களை பார்த்த பிறகு முடிவு எடுத்திருக்கலாம் என்று டாக்டர் சஞ்சய்க்கு தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி போடுவதின் நோக்கம் என்ன?

1. தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. தொற்றின் கடுமையை அல்லது தீவிரத்தை குறைக்க வேண்டும்.

3. தொற்றினால் ஏற்படும் சாவை தடுக்க வேண்டும்.

இந்த மூன்று அம்சங்களும் சிறுவர் சிறுமியருக்கான தடுப்பூசி விஷயத்தில் பொருந்தி வராது.

தற்போது இந்தியாவில் 10 லட்சம் கொரோனா தொற்று நோயாளிகளில் 1.5 சதவீதம் அல்லது 15 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடுகிறது.

இந்த சாவு எண்ணிக்கையில் 80 முதல் 90 சதவீதத்தை தடுப்பு ஊசி மூலமாக நம்மால் தவிர்க்க இயலும்.

எனவே வயதான பெரியவர்கள் கொரானோ வைரஸ் தொற்று காரணமாக இறப்பதைத் தடுக்க தடுப்பூசியைப் பயன்படுத்தலாம். அது பெரிதும் பயன்படுவதாக அமையும்.

இவ்வாறு டாக்டர் சஞ்சய் ராய் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!