March 25, 2023

உங்க பேங்க் அக்கவுண்டில் 10 ஆயிரம் இருந்தால் அரசு சலுகைகள் கட்!

நம் நாட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக இந்தியாவின் வறுமை அளவுகோல் சம்பந்தமாக ஆராய்ந்த அரசாங்கத்தின் நிபுணர் குழுவிருடைய பரிந்துரை செய்திருந்த நிலையில் வங்கிக் கணக்கில் ரூ.10ஆயிரம் இருக்கிறதா… அப்படியானால் நீங்கள் வறுமையான குடும்பம் அல்ல. வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பமாக கருதி, இது வரை பெற்ற சலுகைகளை அரசு பறித்து விடும். இப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கிராமப் பஞ்சாயத்துகளில் வறுமை நிலையை அளவிட சில அளவுருக்களை அரசு வகுத்துள்ளது. இதன்படி, வங்கிக் கணக்குகளில் குடும்பங்கள் வைத்திருக்கும் தொகையை வைத்து பொருளாதார மேம்பாட்டைக் கணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆரம்ப நிலையில், ஒரு சிறப்பான சேமிப்புக் கணக்கிற்கான தேவை 10,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கிராமப்புறங்களில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, அதில் பெண்கள் எண்ணிக்கை, சுயமாக சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்கள், பெண்களின் பொருளாதார ரீதியான பங்களிப்பு ஆகியவை உள்பட 21 காரணிகளை அடிப்படையாக வைத்து வறுமைக்கோடுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் பற்றி மதிப்பிடப்படும். அல்லது, சமையல் எரிவாயு இணைப்பு வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கையையோ, 12 மணி நேர மின்வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கையையோ வைத்து ஒரு கிராமப் பஞ்சாயத்தின் செழுமை கணக்கிடப்படும்.

அதன்படி. வறுமையற்ற 50,000 கிராமப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்கான வங்கிக் கடன் பெற்ற குடும்பங்கள், பால் உற்பத்தி அல்லது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, விவசாயம் அல்லாத தொழில்களில் இருப்போரின் எண்ணிக்கை, வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை உள்ளிட்டவை முக்கிய அளவுருக்களாக வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீட்டு பணிகளை மிஷன் அன்த்யோத்யா என்ற பெயரில் ஊரக வளர்ச்சித்துறை விரைவில் தொடங்குகிறது.