“சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” -மத்திய அரசு அறிவிப்பு

“சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது”  -மத்திய அரசு அறிவிப்பு

இந்திய நாட்டில் பல்வேறு சாதனைகளுக்காக பல விருதுகளை அளித்து வரும் நிலையில் புதியதாக படேல் பெயரில் ஒரு விருதை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

நாட்டின்தேசிய ஒற்றுமைக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அறிவித்தார். நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக சர்தார் வல்லபாய் படேல் சிறு சிறு பகுதிகளாக இருந்த சுமார் 500 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார். அவரது நினைவாக இந்த விருது அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை விருது என்று அழைக்கப்படும் இந்த விருது நாட்டின் அமைதிக்காக சேவை செய்பவர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்பட இருக்கிறது. இது மத்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதுக்கு இணையானது என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!