November 29, 2021

வெளிநாடுகளில் முடக்கப்பட்ட இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு!

கொரோனாவின் தாக்கத்தால் தீடீர் ஊரடங்கு அமலான நிலையில்  கிட்டத்தட்ட 13 நாடுகளில் சிக்கியுள்ள 14,800 இந்தியர்களை 64 விமான சேவைகள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான பயணத் திட்டம் தயாராக உள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்து இருக்கிறது. அத்துடன்  இதற்கான முதல் விமானம் இந்தியாவில் இருந்து மே மாதம் 7ம் தேதி புறப்படுகிறது முதல்கட்ட விமான சேவையில் 13 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் புறப்படும்  என்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், சவுதி அரேபியா, கத்தார், அமெரிக்கா, ஓமன், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லும் எனவும் அரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்தியாவுக்குத் திரும்ப தயாராக உள்ள இந்தியர்கள் யார் என்பதை பட்டியலிட்டு தயாராக வைத்திருக்கிறார்கள். இதற்கென இணைய தளம் மூலமாக ஆன்லைன் பதிவு படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. .

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: https://www.cgidubai.gov.in/covid_register/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

செளதி அரேபியா: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc_yyVAYPD-VYH98RNOWZkDkGKVsf34qnu0oGoLdtts3RG7_Q/viewform?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

மாலத்தீவுகள்: https://hci.gov.in/male/?10196?000

அமெரிக்கா: https://indianembassyusa.gov.in/reg_indian_nationals

இங்கிலாந்து: https://www.hcilondon.gov.in/news_detail/?newsid=227

முதல் நாளான மே 7ஆம் தேதி 10 விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டு செல்லும். அவை 2,300 இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும்

இரண்டாவது நாளான மே 8ம் தேதி 2058 இந்தியர்கள் சென்னை கொச்சி மும்பை ஆமதாபாத் பெங்களூரு மற்றும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவார்கள்’

இரண்டாம் நாளன்று இந்திய விமானங்கள் ஒன்பது நாடுகளுக்கு பறந்து சென்று இந்தியர்களை ஏற்றிக்கொண்டு திரும்பிவரும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நாளான மே மாதம் 9ம் தேதி மொத்தம் 2050 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் மும்பை கொச்சி லக்னோ டெல்லி ஆகிய விமான நிலையங்களில் தரைஇறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நாளன்று வளைகுடா நாடுகள் ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

இந்தியர்களை அழைத்து வரும் சேவை துவங்கிய நான்காம் நாள் மே மாதம் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக அமையும் . அன்று 8 நாடுகளில் சிக்கியுள்ள 1850 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள இந்தியர்கள் அன்று பெரும்பாலான எண்ணிக்கையில் இந்தியாவுக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் அழைத்து வரப்படுவது கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக இந்தியா செல்ல விரும்புவோர் மற்றும் துக்க நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இந்தியா திரும்ப விரும்புவோருக்கு முன்னுரிமை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் இந்தியா திரும்பும் ஒவ்வொரு இந்தியரும் படிவம் ஒன்றை நிரப்பி தரவேண்டும். அந்த படிவத்தின் பிரதியை விமானம் தரையிறங்கும் இடத்திலுள்ள சுகாதார பிரிவு மற்றும் இமிகிரேஷன் கவுண்டர்களில் தரவேண்டும். அந்தப் படிவங்களில் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு காய்ச்சல், இருமல், நீரிழிவு அல்லது பிற சுவாச மண்டல நோய்கள் உண்டா என்பது குறிப்பிட வேண்டும்.

கரோனா வைரஸ் பரவ தொடங்கிய துவக்க காலத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் பூர்த்தி செய்து தந்த படிவம் போன்றதுதான் இப்பொழுது தரப்பட்டுள்ள படிவம்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் எல்லா பயணிகளும் பூர்வாங்க பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கரோனா அறிகுறி எதுவும் இல்லாத பயணிகள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

விமானப் பயணத்தின் போது சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கும் நடைமுறைகளை பயணிகள் தவறாது பின்பற்ற வேண்டும். பயணிகள் இந்தியாவில் வந்து இறங்கியதும் பயணி அனைவரும் பயணிகள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பரிசோதனைக்கு பிறகு அவர்கள் 14 நாட்கள் குவாரண்டைனில் தங்கியிருக்க வேண்டும். மருத்துவமனை அல்லது பிற நிறுவன குவாரண்டைனில்அவர்கள் தங்கியிருக்கலாம் அவர்கள் தங்கியிருக்கின்ற காலத்துக்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.விமான பயணத்துக்கான கட்டணத்தையும் பயணிகள் செலுத்த வேண்டும்.

இந்திய விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தங்கள் வருகையை பயணிகள் ஒவ்வொருவரும் ஆரோக்கிய சேட்டு ஆப்ஸ் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும்

1990ஆம் ஆண்டு போரின்போது 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு வெளியேற்றப் பட்டனர். அதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மற்றொரு முறை ஏமன் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இப்பொழுது மூன்றாவது முறையாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விமான சேவைகளைத் தவிர கப்பல்கள் மூலம் திரும்ப இரண்டு நாடுகளுக்கு இந்திய கப்பல் படைச் சேர்ந்த 3 கப்பல்கள் திங்களன்று இரவை தங்கள் பயணத்தை துவக்கிவிட்டன. அந்த 3 கப்பல்களும் கொச்சி திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.