50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் பணம் போட / எடுக்க ஒரிஜினல் ஐ.டி. அவசியம்!
ஏற்கெனவே வங்கிகளின் போக்கில் நம் நாட்டு ஜனங்களுக்கு கடும் வெறுப்பு நிலவும் நிலையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கணக்கில் பணம் போடும் பொழுதோ, பணம் எடுக்கும் பொழுதோ, வாடிக்கையாளரின் ஒரிஜினல் ஐடி, போட்டோ ஆகியவற்றை சரிபார்ப்பது கட்டாயம் என்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு பொது ஜனங்களை மட்டுமின்றி சகலரையும் மேலும் கடுப்பேற்றியுள்ளது.

நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் வருவாய்த்துறை இது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதற்காக நிதி மோசடி தடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாடிக்கை யாளரின் அசல் மற்றும் நகல் ஆவணங்களை சரிபார்க்கும்போது, போலியான ஆவணங்களை அளிக்கும் நிகழ்வுகள் குறைந்து போகும் என்று வருவாய்த்துறை கூறியுள்ளது. ஆக, இனி 50,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகளுக்கு இது கட்டாயம் ஆகும்.