ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் தாய்லாந்து ஷூட்டிங் நிறைவு!

ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் தாய்லாந்து ஷூட்டிங் நிறைவு!

ஜீவா நடிக்கும் ‘கொரில்லா’ படத்தின் படபிடிப்பு சென்ற ஃபிப்ரவரி 1-ஆம் தேதி பாண்டிச்சேரியில் துவங்கியது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கொரில்லா படக்குழுவினர் தாய்லாந்த் பயணமாகியிருந்தனர். அங்கு சில நாட்கள் நடந்த படபிடிப்பு இப்போது முடிவுற்றது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். டான் சண்டி இயக்கும் இந்த படத்தில் ஜீவாவுடன் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்க், ராதாரவி, சதீஷ், முனீஸ் காந்த், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தமிழில் மிருகங்களை வைத்து படங்கள் வருவது வெகுவாகக் குறைந்துவிட்ட சமயத்தில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கொரில்லாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற ‘சாமுட்’ விலங்குகள் பயிற்சி மையத்தில் இருந்து சிம்பன்சி நடிக்கிறது.

இந்த படத்திற்கு சாம்.சி. இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை வெற்றி மகேந்திரனும், படத்தொகுப்பை ரூபனும் கவனிக்கிறார்கள். . இப்படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!