மலட்டுத் தன்மையுடனான ஆண் கொசுக்களை உற்பத்தி செய்கிறது கூகுள்!

மலட்டுத் தன்மையுடனான ஆண் கொசுக்களை உற்பத்தி செய்கிறது கூகுள்!

உலகில் அதிக நோய்களை பரப்பும் உயிரினமாக கொசு உள்ளது. அதோடு புதிய வைரஸ் நோய்களை மக்களிடம் பரப்பும் முக்கிய உயிரினமாக கொசு உள்ளது. இதனால் கொசுவை அழிக்கும் முயற்சியாக கூகுள் இறங்கியுள்ளது. ஆம் கணினி யுகத்தில், முன்னனியில் உள்ள கணினி நிறுவனம் கூகுள். இதுபல்வேறு கணினி தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. ஆனால் தற்போது, கணினியை மட்டும் சாராது, உயிர் அறிவியல் தொழில் நுட்ப (Verily Life Science) துறையான வெரிலி உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது.

இந்த கொசுவின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூகுள் பறக்கவிட உள்ள ஆண் கொசுக்களுக்கு மலட்டு தன்மை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். அதாவது கொசுவின் இனப்பெருக்கத்தைக் குறைக்கவும், அதன் மூலமாக பரவும் உயிர்கொல்லி நோய்களான ஜிகா (Zika) மற்றும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் ஓர் ஆராய்ச்சியைக் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது வெரிலி. ரோபோட் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் ஆண் கொசுக்களை மலட்டுத் தன்மையுடன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதற்கட்டமாக, 20 மில்லியன் கொசுக்களை கலிபோர்னியாவில் இருக்கும் ஃப்ரெஸ்னோ கவுண்டி என்ற இடத்தில் பறக்கவிட இருக்கிறார்கள். வாரத்திற்கு ஒன்றரை லட்சம் கொசுக்கள் என 20 வாரங்களுக்கு இதை செய்யவிருக்கிறார்கள். இதற்காகவே இரண்டு 300 ஏக்கர் நிலங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

இந்த மலட்டுத் தன்மையுடைய கொசுக்கள் பெண் கொசுக்களுடன் சேரும் போது உருவாகும் கருமுட்டைகள் கொசுக்களை உருவாக்காது. இதன் மூலம், கொசுவின் இனப்பெருக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும். 20 மில்லியன்களில் தொடங்கும் இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் எண்ணிக்கைகளை மேலும் உயர்த்த முடிவு செய்துள்ளது வெரிலி. இந்த மலட்டுத்தன்மை கொசுக்களில் எந்த மரபணு மாற்றங்களும் செய்யப்படவில்லை. பாக்டீரியாக்கள் மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்துவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என கூகுள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!