ஒலிம்பிக்-கில் இப்போ/ எப்போ/ யார் / என்ன? விளையாட்டு -உடனுக்குடன் அறிய “கூகுள்”

வரும் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 2016 ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் இந்த போட்டியை பிரம்மாண்டமாக ஒளிபரப்ப ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ சேனல் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ சேனலின் சி.இ.ஓ. நிதின் குக்ரெஜா, “இந்திய விளையாட்டு ரசிகர்களை கவரும் வகையில் பிரம்மாண்டமாக 24 மணிநேரமும் ஒலிம்பிக் போட்டியை முழுமையாக ஒளிபரப்ப உள்ளோம். இதுவரை யாருமே எதிர்பார்க்காத அளவில் கச்சிதமாக ஒவ்வொரு நிகழ்வையும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம். ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கப்பதக்கங்களையும், 11 சர்வதேச பட்டங்களையும் வென்ற ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் இயான் தோர்பேயை சிறப்பு கமண்டேட்டராக தேர்வு செய்துள்ளோம்.

goole olimpic au 2

இதுதவிர, வர்ணனையாளர் குழுவில் பிரபல இந்திய பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே, காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சலி பகவத், முன்னாள் சர்வதேச ஆக்கி வீரர் விரேன் ரஸ்குயின்கா, பிரபல நீச்சல் வீரர் ரேகன் பொன்சா ஆகியோரை சேர்த்துள்ளோம். இதுதவிர, 14 முதல் 36 நேரடி பீட்களில் இலவசமாக வீடியோ ஸ்டீரீமிங்கிலும் ஒலிம்பிக் போட்டியை ஒளிபரப்பு செய்ய உள்ளோம்”என்று தெரிவித்தார்.

ஆனால் எந்த நாடு எப்போது ஆடுகிறது என்று தெரிய என்ன செய்யலாம்? என்று யோசனையா? கவலை வேண்டாம். உங்களுக்காக உதவி செய்ய காத்திருக்கிறது கூகுள். ஆம்..தனது பயனாளர்களுக்காக ஒலிம்பிக்கின் ஓவ்வொரு நொடியையும் விரல் நுனியில் கொண்டு வருவதற்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

நடக்க இருக்கும்ரியோ ஒலிம்பிக்கின் போட்டி அட்டவணைகள், பதக்கங்களின் எண்ணிக்கை, வீரர், வீராங்கனைகள் குறித்த தகவல்களை கூகுள், போட்டி முடிவுகள், 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தொலைக்காட்சி சேனல்களில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பாக உள்ள நேர அட்டவணையை என பல தகவல்களை கூகுள் தர இருக்கிறது. இந்த தகவல்களை பெற நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை கூகுளில் தட்டச்சு செய்தாலே போதும்.

இது தவிர 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் யு டியூப் மூலமாக ரியோ போட்டிகளின் முக்கிய தருணங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. மேலும் யு டியூப் மூலமாக ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளன. இதற்காகவே சிறந்த 15 வல்லுநர்களை ரியோ டி ஜெனிரோவுக்கு கூகுள் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

மேலும் ரியோ டி ஜெனிரோவை நேரடியாக, கூகுள் மேப்பின் Street View வசதி மூலம் அந்நாட்டின் ஓவ்வொரு இடங்களை 360 டிகிரி புகைப்படங்களை கண்டு ரசிக்க முடியும். இதற்கெனவே Google Street View Trekkers ரியோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் உலகம் முழுவதும் உள்ள தனது பயனாளர்களுக்காக, ரியோ ஒலிம்பிக்கின் நிழலாக மாற தயாராகிவிட்டது கூகுள் நிறுவனம்.

மேலும் அறிய https://googleblog.blogspot.in/2016/08/let-google-be-your-guide-to-rio-de.html