September 25, 2021

கூகிள் நியூஸ் லேப் – பயிற்சி _ஸ்பாட் ரிப்போர்ட் By ?செல்வமுரளி

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த  14.09.2016 அன்று காலை 11 மணிக்கு
கூகிள் நியூஸ் லேப் என்ற பயிற்சி நடைபெற ஏற்பாடாகி இருந்தது. இதில் கலந்து கொண்டு நானும் பயிறசி பெற்றேன். உடன் நானா மற்றும் உதயன் ஆகியோருடன் இணைந்து கொண்டனர்

எல்லாத்துறைக்கும் முகத்தில் மரு இல்லாத கபாலி ஆகவும், ஆர்பாட்டமில்லாத அதகள ராஜாவாகவும் விளங்கும் கூகிள் நிறுவனம்,  ஊடகத்துறை கபாலி ஆக முயற்சிக்காமல் விடுமா என்ன ? கூகிஸ் நியூஸ் லேப்

https://newslab.withgoogle.com/

இந்த பயன்பாட்டில் பல மென்பொருள்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

கூகிள் டிரெண்ட்ஸ்

https://trends.google.com/trends/

இந்த நிமிடம் உலகம் முழுதும் எதைத்தேடியிருக்கிறார்கள்? எந்த நாட்டில் எந்த செய்தி  முதலில் உள்ளது? அந்த நாட்டில் எந்த மாநிலத்தில் இந்த செய்திகள் அதிகம், மாநிலத்தில் எந்த மாவட்டத்தில் இந்த செய்திகள் அதிகம் தேடப்பட்டிருக்கின்றன, என்ன வார்த்தை கொடுத்து தேடியிருக்கிறார்கள் என அணுவை துளைத்து அதில் உள்ள துகளுக்கு பெயரிடுவது போன்று கூகிள்
டிரெண்ட்ஸ் ஐ வெளியிட்டிருக்கிறார்கள். உதாரணம். நரேந்திர மோடி அவர்களை பற்றி தேட வேண்டுமா? எந்த மாதத்தில் அவரை அதிகமாக தேடியிருக்கிறார்கள் ,எந்த மாதத்தில் மிக அதிக தேடல் அவரைப்பற்றி தேடியிருக்கிறார்கள். என்ன வார்த்தை தேடியிருக்கிறார்கள் என்பது வரை அடக்கம்

மைமேப்ஸ்
https://www.google.com/maps/about/mymaps/
தரவு அறிவியல் ஊடகம் என்பது நமது அச்சுஊடகங்களுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் மிக அத்தியாவசிய தேவை. அதை நோக்கிய தேடலில் பல மென்பொருள்கள் ஏற்கனவே உள்ளது. அதாவது தரவு அறிவியல் என்பது இந்தியா முழுதும் உள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் கல்வி அறிவு அதிகமாக இருக்கிறது என்பதை இந்திய வரைப்படத்தில் வண்ணத்தின் துணை கொண்டு நிரப்புவது. இதற்கு ஏற்கனவே டேப்ளூ போன்ற பல மென்பொருள்கள் இருந்தாலும் கூகிளாரின் சேவை என்னவோ எளிமை என்பதில்தான் இருக்கிறது. இங்கேயும் வெகு எளிது. ஒரு எக்செல் ஆவணத்தில் மாநிலங்களின் பெயரை ஒரு நெடுவரிசை அட்டவணையில் கொடுத்து அடுத்த நெடு வரிசை அட்டவணையில் மதிப்பினை கொடுத்து கூகிள் தடங்காட்டியில் உள்ளீடு செய்தால் சூடான இந்திய வரைபடம் கொடுக்கப்பட்ட விபரங்களுடன் தயார்.

 

கூகிள் இமேஜ்
https://images.google.com/?gws_rd=ssl

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அச்சு ஊடகங்களில் பல வகையான மோசடி செய்திகள் இடம்பெறுகின்றன. இதுபோன்ற சமயங்களில் நாம் கூகிள் நிறுவனத்தின் இமேஜ் தொழில்நுட்பத்தில் உங்களிடம் உள்ள புகைப்படத்தினை கூகிள் இமேஜ் ல் பதிவேற்றம் செய்தால் மந்திரவாதியின் மந்திரக்கண்ணாடியின் உள்ளே உள்ள காட்சி தெரிவது போல நாம் பதிவேற்றம் செய்த படம் தொடர்பான அனைத்து செய்திகளும் தலைப்பு உடன் திரையில் காட்டப்படுகின்றன. இதை வைத்து அந்த செய்தி தொடர்பான விசயங்களை நாம் அறிந்துகொள்ளலாம். படத்தினை கொடுத்தால் விபரம் வருகிறது. அசைபடங்களை உறுதித்தன்மையை காணவும் கூகிள் வழி
செய்கிறது. உங்களிடம் உள்ள அசைபடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் அந்த அசைபட
காட்சியை ஒரு படக்கோப்பாக மாற்றி கூகிள் இமேஜ் ல் அப்லோடு செய்தால் அப்புறமென்ன அதன் விபரத்தினையும் தெளிவாக காட்டுகிறது இந்த கூகிள் மாயக்கண்ணாடி

360 டிகிரி புகைப்படம் உருவாக்கம்

நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி பார்வையில் நம்மைச் சுற்றியுள்ள காட்சிகளை நாம் முழு பார்வையியில் பார்க்கலாம். இதை வைத்து இயற்கை காட்சிகள் ,மரபுப் புகைப்படங்கள், மருத்துவப் புகைப்படங்கள் என எல்லாவற்றையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கவியலும்

360 http://grumpysailor.com/#!/?intro

மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்குமெண்ட் ரியாலிட்டி போன்ற பல தொழில்நுட்பங்கள் சொல்லித்தர மனதிருந்தாலும், நேரமில்லாததால் அந்த கூகிள் நிறுவனத்தின் பிரதிநிதி விடைபெற்றுக்கொண்டார். ஆனர் உண்மையில் செய்தித்துறையில் பல தேவைகள் இருக்கிறது.
சிமாண்டிக் கன்டென்ட் அனலிசஸ் (semantic content analysis) என்ற தொழில்நுட்பத்தின் தேவை
அதிகமிருக்கிறது. நாம் என்னதேடினாலும் தகவல்கள் உடனே தேடு தளத்தில்
திரையிடப்படுகின்றன. ஆனால் திரையிடப்படும் காட்சியை வைத்துக்கொண்டு களமாட
இயலாது. அப்போதுதான் இந்த சிமாண்டிக் கன்டென் அனலிசஸ்(semantic content analysis) நுட்பம் தேவை.

உதாரணம்
சசிகலா என்ற பெயரினை கொடுத்தது தேடினால் அவர் பற்றிய செய்திகள் திரையில்
தெரியும். ஆனால் அவருடன் சம்பந்தப்பட்டிருக்கும் நபர்கள் யார்?, அவர் சமீபகாலமாக எந்த செய்திகளில் எவ்வாறெல்லாம் பேசப்பட்டுவருகிறார். அவர் சம்பந்தப்பட்ட/பயணித்த இடங்கள் , அவர் சம்பந்தப்பட்ட பல நாளிதழ் செய்திகள் , எதிரிகள் யார், நண்பர்கள் யார் என எல்லா விபரமும் ஒரு திரையில் தெரிந்தால் எப்படி இருக்கும். அந்த நுட்பம்தான் இந்த சிமாண்டிக் கன்டென்ட் அனலிசஸ்.(semantic content analysis)

இந்த சிமாண்டிக் கன்டென்ட் அனலிசஸ்(semantic content analysis) எல்லா ஊடகங்களுக்கும் மிக அத்தியாவசிய தேவை. இந்தத் தேவை மிக அதிகம் என்பதையும் கூகிள் நிறுவனம் உணர்ந்திருக்கும். குறைவான நேரத்தில் இந்த பயிற்சியை ஏற்பாடு செய்த சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி!

செல்வமுரளி