March 27, 2023

கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம்!

உலக அளவில் அதிகமானோரால் டவுன்லோடு செய்யப்பட்டவைகளில் ஒன்றான கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக வழிகாட்டும்.

அதாவது ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் மேப்ஸ் செயலி முதலில் ஜி.பி.எஸ்.  மூலம் வழிகளை சேகரித்துக் கொண்டு பின் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ விவரங்களை பயன்படுத்தி பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்.

கூகுள் மேப்ஸ் செயலி ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் என்ற போதும், பயனர்கள் ஸ்மார்ட்போன் கேமராவிற்காக எப்போதும் கையை உயர்த்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

பயனர் இருக்கும் இடத்தை மேப்ஸ் சரியாக கண்டறிந்து, சீராக இயங்க துவங்கிடும். புதிய அம்சம் அனைவருக்கும் சேர்க்கப்பட்டதும், கூகுள் மேப்ஸ் செயலில் ஸ்டார்ட் ஏ.ஆர். (Start AR) எனும் பட்டன் இடம் பெறும் என தெரிகிறது. பயனர் செல்ல வேண்டிய இடத்தை சீராக காண்பிக்கும் வகையில் புதிய யூசர் இன்டர்ஃபேசை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது.

தற்சமயம் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அம்சம் அனைவருக்கும் வழங்குவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்றாலும் அனைவருக்கும் விரைவில் இவ்வசதி வந்து விடும் என்று நம்பலமாம்!.