நொடிக்கு நொடி முன்னேறிக் கொண்டே இருக்கும் இணைய உலகில் சாதனை புரிய மெனக்கிட்ட ஏகப்பட்ட நிறுவனங்கள் பலமிழந்து காணாமல் போயிருக்கின்றன. அதே சமயம் தக்கணூண்டு பசங்களால் ஜாலிக்காக உருவாக்கப்ப்பட்டு புதிய அலையாக வந்த நிறுவனங்களில் சில எதிர்பாராத வெற்றி பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் தேடியந்திர நிறுவன உலகில் கூகுள் 21 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்தனை 20 ஆண்டுகளில் கூகுள், இணைய உலகில் தேடலுக்கான மறு பெயராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. அது அடைய வேண்டிய தூரம் என்னவோ கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருக்கிறது. ஆனாலும் கூகுள் இப்போதைக்கு மாபெரும் இணைய சாம்ராஜ்யமாக வேரூன்றி வர்த்தக நோக்கில் பார்த்தால் டிரில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதனிடையேதான் ஆன்லைன் தேடுபொறி நிறுவனமான கூகுள், 2018 ஆம் ஆண்டின் சிறந்த பிராண்டாக உருவெடுத்துள்ளது. YouGov நிறுவனம் மக்களிடம் கருத்துக்கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் மக்களிடம் அதிகளவு பிரசித்தி பெற்றிருந்தாலும் Facebook இந்த பட்டியலில் எட்டாவது இடத்தைத்தான் பிடித்திருக்கின்றது.. மேலும் Ola மற்றும் Zomato முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. இதேபோன்று 2018 ம் ஆண்டு அதிக பிராண்டுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது YouGov. இதில் ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உணவு விநியோக நிறுவனங்களான, Uber Eats, Zomato, Swiggy ஆகியவை தான் 2018 ம் ஆண்டு அதிக வளர்ச்சி பெற்ற பிராண்டுகளின் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உணவு விநியோகிப்பவர் மூலமாக பல சர்ச்சைகளுக்கு உள்ளான Zomato தற்போது, அதிக வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. தனது இமேஜ்ஜை மாற்றுவதற்காக Zomato கையில் எடுத்த திட்டங்கள் பலனளித்து இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் மொத்தம் 29 நாடுகளில் உள்ள சுமார் 250 பிராண்டுகளின் தரவுகளை திரட்டி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளவில் சிறந்த பிராண்ட் பட்டியலிலும் கூகுள்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதில் ஸ்வாரஸ்யம் என்னவென்றால், முதல் 10 இடங்களைப் பிடித்த ப்ராண்டுகளில் Nike Shoe நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து பிராண்டு களுமே டிஜிட்டல் நிறுவனங்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் மக்கள் அனைவரும டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைந்து கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது