தனி நபர் விமானம் எனப்படும் பறக்கும் கார் சேல்ஸ் தொடங்கப் போகுது! – வீடியோ

தனி நபர் விமானம் எனப்படும் பறக்கும் கார் சேல்ஸ் தொடங்கப் போகுது! – வீடியோ

அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மவுண்டைன் வீவ் நகரில் கிட்டி ஹாக் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ்க்கு சொந்தமானது. கிட்டி ஹாக் நிறுவனம் தனிநபர்கள் பறப்பதற்கான இயந்திரத்தை தயாரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து தற்போது சிறிய விமானத்தை உருவாக்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று விமானத்தின் செயல்பாடுகள் தொடர்பான வீடியோவை லாரி பேஜ் வெளியிட்டார்.

google flight apr 26

அப்போது லாரி பேஜ் கூறியதாவது:  தனிநபர் விமான கனவை எங்களது குழு நனவாக்கியுள்ளது. ஒவ்வொரு தனிநபரும் இந்த விமானத்தை பயன்படுத்தும்போது, உலகில் எல்லையில்லாத வாய்ப்புகள் எங்களுக்கு கொட்டிக்கிடக்கும் என்று நம்புகிறோம்.

2017ம் ஆண்டு இறுதிக்குள் எங்களது முதல் தனிநபர் விமானம் விற்பனைக்கு வரும். இந்த விமானம், அதில் உள்ள எட்டு இறக்கைகள் மூலம் இயக்கப்படுகிறது. இது உயர பறப்பதும், தரையிறங்குவதும் ஹெலிகாப்டர் போன்று  இருக்கும். இதன் மொத்த எடை 100 கிலோ. தரையிலிருந்து சுமார் 4.5 மீட்டர் உயரத்தில் பறக்கலாம். மணிக்கு 40 கி.மீட்டர் தூரம் பயணம் செய்யலாம்.

இது, புதிய மின்சார விமானமாகும். மேலும், பாதுகாப்பானது மற்றும் சோதனை செய்யப்பட்டது. அமெரிக்காவின் நெருக்கடி இல்லாத பகுதிகளில் இதை இயக்க சட்டப்படியான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.  விமானிக்கான உரிமம் பெற தேவையில்லை. 2 மணி நேரம் பயிற்சி எடுத்தாலே இந்த கருவியை எளிதாக கையாளலாம்.

https://www.youtube.com/watch?v=mMWh4W1C2PM

Related Posts

error: Content is protected !!