March 31, 2023

இன்னிய கூகுள் டூடுளில் இடம் பிடித்த பர்த் டே லேடி ஜூன்கோ தைபே!

ஜப்பானில் புகுஷிமா அருகே உள்ள மிகாரு என்ற ஊரில் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜூன்கோ தைபே பிறந்தார். தக்கனூண்டு வயசு முதலே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட அவர் ஜப்பானில் உள்ள மவுன்ட் நசு என்ற மலையில் அவர் ஏறிய போது அவருக்கு வயது ஜஸ்ட் 10. அந்த அளவுக்கு அவரது மலையேற்ற ஆர்வத்துக்கு அவரது குடும்பம் ஆதரவு அளித்தது.

அப்பாலே கல்லூரி காலத்தில் பெண்களுக்குகென தனி மலையேற்ற குழுவை 1969 ஆண்டு ஆரம்பித்தார். ஆரம்பிக்கப்பட்ட மூன்று வருடங்களில் அவரது தலைமையிலான மலையேறும் குழு ஜப்பானின பல உயரமான சிகரங்களை ஏறி கடந்தது.

1975-ம் ஆண்டு ஜப்பானிய பெண்கள் எவரெஸ்ட் மலையேற்ற குழு என்று பெயரிடப்பட்ட 15 பெண்கள் அடங்கிய குழுவினர் ஜூன்கோ தைபே தலைமையில் முதல் முயற்சியாக நேபாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை அடைய புறப்பட்டனர். அந்த குழுவில் பெரும்பாலான பெண்கள் ஆசிரியர்கள், கணினி மென்பொறியாளர்கள், ஜூன்கோ தைபே மற்றும் இன்னொருவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தன.

நேபாளத்துக்குச் சென்ற அவர்கள் அன்னபூர்ணா சிகரத்தை வெற்றிகரமாக எட்டினர். பின்பு எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது பற்றி முடிவெடுத்தனர்.ஜப்பானில் அவர்களுடைய எவரெஸ்ட் மலையேற்றத்துக்கு அந்த நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் நாளிதழ் ஒன்றும் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்து நிதி திரட்டும் பணியில் ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான தொகையே திரட்ட முடிந்தது.

இருந்தாலும் 1975-ம் ஆண்டு ஜூன்கோ தைபே தலைமையிலான குழு எவரெஸ்ட் ஐ நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது அவர்களுடைய செலவை குறைப்பதற்காக பல உபகரணங்களை அவர்களாகவே தயாரித்தனர். குழுவில் இருந்த ஆசிரியர்களின் மாணவர்கள் தங்களுடைய உணவைக் கூட சேகரித்து குழுவினருக்கு அளித்தனர்.

ஒரு வழியா காட்மாண்டுவை அடைந்த அவர்கள் எட்மன்ட் ஹிலாரி எவரெஸ்ட் ஐ அடைந்த அதே வழியை பின்பற்றி ஏற தொடங்கினாங்க. இடையில் 6300 அடி உயரத்தில் இவர்கள் குழு முகாமிட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு பனிச்சரிவு ஏற்பட்டு அவர்களது முகாம் பாதிப்படைந்தது. குழுவின் பெரும்பாலானோர் பனியின் அடியில் சிக்கிக் கொண்டனர். ஜூன்கோ தைபே ஆறு நிமிடங்களுக்கு சுய நினைவை இழந்தார்.

ஆனா வழிகாட்டியின் உதவியால் உயிர் பிழைத்தார். இந்த விபத்துக்கு பிறகு பல பெண்கள் பயணத்தை தொடர விரும்பவில்லை. ஆனால் ஜூன்கோ தைபே மற்றும் சில பெண்கள் மட்டும் மீண்டும் பயணத்தைத் தொடர முடிவெடுத்ததனர். பின்பு சரியாக 12 நாட்களுக்கு பிறகு 1975 மே 16-ல் ஜூன்கோ தைபே எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண்ணாக வரலாற்றில் தன் பெயரை அழுத்தமாக பதித்தார்.

அது மட்டுமில்லாம் 1992 வருடத்துக்குள் உலகில் உள்ள ஏழு முக்கிய சிகரங்களில் கால் பதித்த முதல் பெண் என்ற சாதனையையும் படைத்தார்.

பின்னாளில் உடல் நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் 2016ல் தனது 77-ம் வயதில் காலமானார்.

அப்பேர்பட்டவரின் பிறந்த நாளை கூகுள் டூடுள் நினைவூட்டி பெருமை கொள்கிறது.