உலகின் முதல் ஸ்மார்ட் ஜாக்கெட் விலைக்கு வந்தாச்சு! – வீடியோ

உலகின் முதல் ஸ்மார்ட் ஜாக்கெட் விலைக்கு வந்தாச்சு! – வீடியோ

இன்றைய நவீன உலகில் தலை முதல் கால் வரை நாம் பயன்படுத்தும் அனைத்துமே ஸ்மார்ட் தான். அந்த வகையில் தற்போது ஆடைகளிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை உட்புகுத்தி ஸ்மார்ட் ஜாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் லெவி நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ஸ்மார்ட் ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளன. ஆடைகளில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினை புகுத்துவது குறித்து 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்தது. அதன்படி, இந்த ஸ்மார்ட் ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

smart jacket mar 15

இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால், தொலைபேசி அழைப்புக்களை பயன்படுத்துவது, வெளியில் செல்லும் போது பாடல்களைக் கேட்டு மகிழ்வது போன்றவற்றை செய்ய இயலும். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஜாக்கெட் தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் கிடைக்கப்பெறும்போது ஒரு வகையான அதிர்வினை ஆடைகளில் ஏற்படுத்தி தெரிவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகளுக்கு ப்ளூடூத்தின் உதவியுடன் ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டிருத்தல் அவசியமாகும்.

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை உட்புகுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஜாக்கெட்டின் கை பகுதியில் ஸ்லைடு பொருத்தபட்டிருக்கும் இதன் மூலம் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் பற்றிய விவரம் கிடைப்பதை நாம் உணரலாம். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.23000 ஆகும்.

https://www.youtube.com/watch?v=kVIeEVQ8kgU

error: Content is protected !!