March 31, 2023

மைக்ரோசாப்ட்டுக்கு எதிரா அவசரப்பட்டு அசிங்கப்பட்ட கூகுள்!

Microsoft நிறுவனத்தின் Chat GPT என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் போன வருஷம் நவம்பர் மாசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுச்சு. Chat GPT அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான OpenAIல் உருவாக்கப்பட்டதாகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் சகல விதமான கேள்விகளுக்கும் மனுஷங்க போலவே விரிவா பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்குது.

தற்போது Chat GPTக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் Chat GPT அறிமுகமானதில் இருந்து இதற்கு போட்டியாக கூகுள் ஒரு சாட்போட்டை அறிமுகப்படுத்த தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வந்துச்சு. அந்த வகையில், கூகுள் நிறுவனம் ‘Bard’ என்ற சாட்போடை அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த சாட்போட்டிற்கான விளம்பர வீடியோ ஒன்றையும் கூகுள் வெளியிட்டிருந்தது.

ஆனா அந்த பார்ட் சாட்போட் அளித்த பதில்கள் தவறாக இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் இணைய தேடலில் பிரபலமான கூகுள் நிறுவனத்தின் சாட்போட்டே தவறான தகவல்களை வழங்குவதால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்ய ஆரம்பிச்சிட்டாய்ங்க. அதாவது மைக்ரோசாஃப்ட்டின் டெமோவுக்கு அடுத்த நாளே ‘Bard’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அதன் சொந்த AI சாட்-பாட்டை அறிமுகப்படுத்தியது கூகுள். Chat GPT போன்றே நாம் கேட்கும் கேள்விகளுக்கு இதுவரை அது இணையத்திலிருந்து சேகரித்த தகவல்கள் அனைத்தையும் கொண்டு புத்திசாலித்தனமாகப் பதிலளிக்கும்.

இதுகுறிச்சு கூகுள் ட்விட்டரில் GIF ஒன்றை ஷேர் செஞ்சிருந்துது… அதில் Bard-யிடம் ‘என் 9 வயது மகனிடம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் எந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிச் சொல்லலாம்’ அப்படீன்னு கேள்வி எழுப்பப்பட்டிருக்கும். அதற்கு சில கண்டுபிடிப்புகளைப் லிஸ்ட்லிட்டிருக்கும் Bard. அதன் கடைசி புள்ளியாக நம் சூர்ய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கோளின் முதல் புகைப்படத்தை எடுத்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிதான் எனக் குறிப்பிட்டிருந்தது Bard. ஆனால், இது தவறான தகவலாக்கும்.

2004-லேயே சூர்யகுடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களின் படங்களை எடுக்கத் தொடங்கிவிட்டோம். அப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வடிவமைப்பு கட்டத்தையே எட்டவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் கூகுளின் பதிவிலேயே மறுப்பு தெரிவிக்க, இதைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் கூகுள் பங்கு விலை 9% சரிந்து 100 பில்லியன் டாலர் வரை இழப்பை கண்டுள்ளது. ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்து போச்சு

இப்போ இந்தப் பிழை பற்றி பேசிய கூகுள் பிரதிநிதி, “இந்த செயற்கை நுண்ணறிவு சேவைகளை இன்னும் தீவிரமான சோதனைகளுக்கு உட்படுத்தவேண்டும் என்பதற்கு இது ஒரு சான்று. பல பயனர்களைக் கொண்டு தொடர்ந்து சோதனை செய்து மாற்றங்கள் செய்யவுள்ளோம்.” அப்படீன்னு தெரிவிச்சிருக்கார்