September 25, 2021

காளைகள் உருவம் பொறிக்கப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் சேல்ஸூக்கு வருது

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தனது 2016-ம் ஆண்டு அறிவிப்பாணைகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தது மத்திய அரசு. இது தொடர்பான நீதிமன்ற அமர்வு ஜல்லிக்கட்டு மனு மீதான முடிவை எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியிடம் தெரிவித்தது. இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக காளைகள் உருவம் பொறிக்கப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் விரைவில் விற்பனைக்கு வருகிறது. முதல்கட்டமாக 50 ஆயிரம் நகைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

jwell jan 25

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி வாட்டும் குளிரில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லட்சணக் கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என திரண்டு அறவழியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இந்தியாவையே திரும்ப பார்க்க செய்தது.

இதனைக் கவனத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் உருவம் பொறிக்கப்பட்ட தங்க, வைர, வெள்ளி ஆபரணங் களைத் தயாரிக்க நகை கடை உரிமையாளர்கள் முடிவு செய்து, முதல்கட்டமாக சுமார் 50 ஆயிரம் ஆபரணங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்த குமார், “மக்களின் ரசனை மற்றும் விருப்பத்துக்கு ஏற்றவாறு தங்க, வைர, வெள்ளி ஆபரணங்களைத் தயாரித்து வருகிறோம். தமிழகத்தில் நடந்துவரும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பில் கலந்து கொண்டோம். ஏற்கெனவே, தமிழகத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் தங்கம், வைர கம்மல், மோதிரம், செயின், வளையல் விற்பனை செய்து வருகிறோம். மேலும், பிரபல நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உருவம், சின்னம் பொறித்த தங்கம் மற்றும் வைர நகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். குதிரை, யானை, மயில் போன்ற உருவம் பொறிக்கப்பட்ட நகைகள் தற்போது விற்பனையில் உள்ளன.

மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப உலகிலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் உருவம் பொறிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு வகை நாட்டு காளைகளின் மாதிரி உருவம் பொறிக்கப்பட்ட மோதிரம், டாலர்கள், பிரேஸ்லெட், செயின் என முதல்கட்டமாக 50 ஆயிரம் ஆபரணங்களைத் தயாரிக்க உள்ளோம். மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். ஆரம்ப விலை ரூ.4 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் வரையில் இருக்கும். இந்த வகை ஆபரணங் களை விற்பனை செய்யும்போது பல்வேறு சலுகைகளையும் அறிவிக்க உள்ளோம்” என்றார்