ஏகப்பட்ட பேர்களின் கனவுலகமான சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று பலருக்கு லட்சிய வேட்கையே உண்டு. அந்த வரிசையில் இண்டிபெண்டெண்ட் பிலிம் மேக்கரான அருண் காந்த் என்ற அறிமுக இயக்குநர் புதுமுகங்களை வைத்து இயக்கி தயாரித்திருக்கும் படம்தான் ‘கோகோ மாக்கோ’.
ஜஸ்ட் 12 நாட்களில் 10 லட்சம் ரூபாய் செலவிற்குள் ஒன்றரை மணி நேரம் ஓடக் கூடிய இந்த திரைப் படத்தின் திரைக்கதை, வசனம், லைட்டிங், லொகேசன், இன்னபிற தேவைகள் என்று எதையும் யோசிக்காமல் ஒரு சினிமா எடுக்க முயன்று அதை முடித்து ரிலீசும் செய்து விட்டார்கள். இதே கோலிவுட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து தயாரான பல படங்கள் இன்றளவும் வெளியிட முடியாமல் முடங்கி கிடக்கின்றன. அந்த லிஸ்டில் சேராமல் போனதே கோகோ மாக்கோ டீமின் வெற்றிதான்.
படத்தின் கதை என்னவென்றால் ஒரு ஆர்வ கோளாறு மியூசிக் டைரக்டர் ஆல்பத்தை ஒரு இசை நிறுவனம் வெளியிட ஒப்புக் கொள்கிறது. அதற்காக மியூசிக் வீடியோ ஒன்றைத் தயார் செய்ய முடிவு செய்து மலை சாலைப் பயணம் மேற்கொள்ளும் ஒரு இளம் காதல் ஜோடியின் பயணத்தை அவர்களுக்கே தெரியாமல் படம் எடுத்து அதை வீடியோ ஆல்பமாக உருவாக்க்க திட்டமிடுகிறார். அந்த ஆல்பம் வெளியானதா, காதல் ஜோடியின் சாலைப் பயணம் என்ன ஆனது என்பதுதான் கோகோ மாக்கோ.
படம் முழுவதையும் ‘Go Pro ’ கேமராவில் கிடைத்த ஒளியில் எடுத்திருக்கிறார்கள். இளம் காதல் ஜோடியாக நடித்திருப்பவர்கள் நிஜக் காதல் ஜோடி போலவே யதார்த்தமாய நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து படம் எடுக்கும் சாம்ஸ் மற்றும் அவரது உதவியாளர் காமெடி என்ற பெயரில் நம் பொறுமையை சோதிக்கிறார்கள்.
படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான அருண்காந்த், ஹீரோ ராம்குமார், ஹீரோயின் தனுஷா ஆகியோர் மட்டும் படத்தில் நடித்திருப்போர் லிஸ்டில் சேருகிறார்கள், அதே சமயம் சீனியர் நடிகர்களான ஒய்ஜி மகேந்திரா, சந்தான பாரதி, டெல்லி கணேஷ், அஜய் ரத்தினம், சாம்ஸ் உள்பட சகலரும் கடுப்பேத்தற்றாங்க ரகம்தான்
படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் புதியவர்கள் மட்டும் இன்றி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்கள், என்பது படம் பார்க்கும் போதே தெரிகிறது. ஆனால் படம் பார்க்க வருபர்கள் அப்படீயில்லை என்பதை மறந்து விட்டார்கள். இந்த படம் முடிந்த போது நம் பக்கத்து சீட் நண்பர் சொன்னது போல், ’தங்களுக்கு கிடைத்த குறைந்த வசதிகளை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கும் இக்குழுவினர், அதில் சில வித்தியாசமான பரிசோதனை முயற்சிகளை யும் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஒரு திரைப்படத்திற்கு கதையும், திரைக்கதையும் எவ்வளவு முக்கியமோ அதுபோல் தரம் என்பதும் முக்கியம் என்பதை புரிந்து எதிர்காலத்தில் சினிமாவில் பயணித்தால் நல்லது.
மொத்தத்தில் இந்த கோகோ மாக்கோ கெக்கேபிக்கேதான்
மார் 2 / 5
சினிமாக்கள் நம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பலமானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து…
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2ம் பாகம்…
இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த போர்களில் அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அதன் பின்னால் அமெரிக்கா…
1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160…
யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள்…
This website uses cookies.