March 27, 2023

கோவா கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் வாய்ப்பு!

கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் 1957ல் நிறுவப்பட்டது. ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற இந்த கப்பல்தளம் கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ளது. இந்த கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக உள்ள 34 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக்னீசியன் அப்ரெண்டிஸில் 20, ஆபிஸ் செக்ரட்டரிஷிப்/ஸ்டெனோகிராபியில் 5, அக்கவுண்டன்சி/ஆடிட்டிங்/டேக்சேஷனில் 5, பர்சேஸ் அண்டு ஸ்டோர் கீப்பிங்கில் 4ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பேப்ரிகேஷன், இன்டஸ்ட்ரியல், மெக்கானிக்கல், ஷிப் பில்டிங், டெலிகம்யூனிகேஷன், பாலிமர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு இதே படிப்புகளில் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு பிளஸ் ௨ படிப்பை வொகேஷனல் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு வாயிலாக இருக்கும்.

விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

General Manager (HR&ADMN),Goa Shipyard Limited, Vasco-DA-Gama, Goa-403802

கடைசி நாள் : 2017 அக்.,31.

விபரங்களுக்கு : ஆந்தை வேலை வாய்ப்பு