ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதுக் கட்சி தொடங்கிட்டார்!

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதுக் கட்சி தொடங்கிட்டார்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அதற்கு ஜனநாயக ஆசாத் கட்சி (democratic azad party) என பெயர் சூட்டியுள்ளார்.

மூத்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான குலாம் நபி ஆசாத் 22 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ந்தேதி முதல் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்து வந்த குலாம் நபி ஆசாத், கடந்த பிப்ரவரி 15ந்தேதி ஓய்வு பெற்றார். ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த முறை குலாம் நபி ஆசாத்துக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

1973ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென போர்க்கொடி உயர்த்திய ஜி – 23 அதிருப்தி தலைவர்கள் குழுவுக்கு தலைமை வகித்து வந்தார்.

காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் அண்மையில் விலகினார். ஆகஸ்ட் 26 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும் அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது குலாம் நபி ஆசாத், “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

error: Content is protected !!