நவம்பர் 24ல் ரிலீஸாகப் போகும் ஆக்ஷன் அட்வெஞ்சர் படம் – ‘இந்திரஜித்’
கெளதம் கார்த்திக் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 4 படங்கள் வெளியாகியுள்ளன. 5வது படமான ‘இந்திரஜித்’ வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘கலைப்புலி’ தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘இந்திரஜித்’ -ல் சோனாரிகா படோரியா, ‘உதயம் NH4’ அஷ்ரிதா ஷெட்டி என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், சுதன்சு பாண்டே, பிரதாப் போத்தன், ராஜ்வீர் சிங், சச்சின் கடேகர் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி டைரக்டர் கலாபிரபு-விடம் கேட்ட போது, ““ஒரு புதையலை தேடி, சென்னையில் இருந்து கோவா செல்லும் ஒரு குழுவை பற்றிய கதை இது. புதையலை தேடி அலையும்போது அந்த குழுவினருக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் திரைக்கதை. அவர்கள் புதையலை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி” என்று ஷார்ட் அன்ட் ஷார்ப்பாக பதில் சொன்னார்.
கே.பி. இசையமைத்துள்ள இதற்கு ராஜாமணி ஒளிப்பதிவு செய்துள்ளார், வி.டி.விஜயன் – எஸ்.ஆர்.கணேஷ் பாபு இருவரும் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர். படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். தற்போது, படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளனர்.
இந்த டிரையிலர் ரசிகர்களிடையே வைரலாகி இருக்கிறது. கூடவே, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது. ஆக்ஷன் அட்வெஞ்சராக உருவாகியுள்ள இப்படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.