ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்! – AanthaiReporter.Com

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்!

கோலிவுட்டில் ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசன் தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ் பெற்ற நடிகராக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். ‘மனம்போல மாங்கல்யம்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்திபன் கனவு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கற்பகம்’, ‘புன்னகை’ போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புக ளாகப் போற்றப்பட்டது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள அவர், சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஜெமினி கணேசன்.

ஆனாலும் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாக திகழ்ந்தார் ஜெமினி கணேசன். அவரது 19-வது வயதில் பெற்றவர்கள் பார்த்து பாபுஜி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அவர்தான் அவருக்கு முதல் மனைவி. அதன்பிறகு சினிமாவில் நடிகரான பிறகு தன்னுடன் நடித்த சாவித்திரி, புஷ்பவல்லி என்ற இரண்டு நடிகைகளை திருமணம் செய்தார். இதில் சாவித்ரி திருமணத்தை மட்டும் வெளிப்படையாக அறிவித்தார். புஷ்ப வல்லி திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தார். புஷ்வல்லியின் மகள் தான் இந்தி நடிகை ரேகா.திரை வாழ்க்கை முடிந்து ஓய்வில் இருந்தபோது தனது 79வது வயதில் ஜூலியானா என்ற 35 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்டார். இருவரும் சிலகாலங்கள் தனிக்குடித்தனம் இருந்தனர். ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஜெமினி தன் இறுதி நாட்களை முதல் மனைவி பாபுஜி வீட்டில் கழித்தார். 75 வயதில் ஜெமினி காதல் வயப்பட்டது அப்போது பரபரப்பாக சேப்பட்டது.

இப்பேர்பட்ட நடிகர் ஜெமினிகணேசன் மீதான அபிமானம் காரணமாக தன் மகனுக்கு ஜெமினி என்று பெயர் வைக்கிறார் டி.. சிவா. ஜெமினியின் காதல் நடிப்பை மகனிடம் சொல்லி வளர்க்கிறார். இதனால் மகன் அதர்வாவுக்கு காதலிப்பதும், காதல் வசப்படுத்துவதும் கைவந்த கலையாகிறது. இதனால் ஒரே தருணத்திலும், அடுத்தடுத்தும் நான்கு பேரைக் காதலிக்கிறார். அந்தக் காதல்கள் கலைந்து போனது ஏன்? , முத்தாய்ப்பாக அதர்வா யாரைத் திருமணம் செய்து கொள்கிறார், இதனிடையே காமெடியரான சூரியை எப்படி அதர்வா சந்திக்கிறார், முன்னாள் காதலிகளின் தற்போதைய நிலை என்ன என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் படமே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’.

இதில் `ப்ளேபாய்’ ரோலைப் பார்க்கும் போது சச்சின் படத்தில் விஜய் கேரக்டர் நினைவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். மேலும் முகத்தை அப்பாவித்தனமாய் வைத்து கொண்டாலே போதுமென்று முடிவு செய்து நடிக்க முயலவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காதலிகளாக வரும் ரெஜினா, ப்ரணிதா, அதிதி மூவரும் வெறும் கொலு பொம்மைகளாக வந்து போவது ரசிக்க முடியவில்லை.. மேலும் அப்பாவாக வரும் டி. சிவா. தன் மகன் லவ் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து , வருத்தப்படுவதற்குப் பதில் பொறாமைப்படுவதுபோல உல்டாவாகத் தெரிவதை சக சீட் காரர் கமெண்ட் அடிக்கும் அளவுக்கே இருந்தது. .

அப்புறம் சுருளிராஜன் என்ற பெயரில் வரும் சூரி. சட்டை காலர் பக்கத்தில் அரிவாளுடன் கடன்காரர்களுக்கும் , காவல் துறைக்கும் பயந்தவர் மாதிரியும் , காமெடி செய்வது மாதிரியும் செய்யும் லூட்டிகள் ரசிக்க வில்லை என்றாலும் ஹீரோவின் காதலுக்கு அவர் பெண்கள் சார்பில் கொடுக்கும் விளக்கம் சபாஷ்.

மேலும் “சசிக்குமார்னு பேர் சொன்னப்பவே , நட்புக்கும் ,காதலுக்கும் ஹெல்ப் பண்ணிடுவேன்னு நான் ,யோசித்திருக்க வேண்டும் … சமுத்திரகனி உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் … ” என்று வரும் டயலாக்குக்கும் “ஒரு பொண்ணு உடம்பை மட்டுமல்ல … மனசை கெடுக்கிறவனும் கெட்டவன்தான்டா …” என்பது உள்ளிட்ட டயலாக்குகளுக்கு கைத்தட்டல் சப்தம் பறக்கிறது . மொத்ததில் இரண்டே கால் மணி டரை பண்ணி அரை மணி நேரமே சிரிக்க வைத்தார்கள் என்பதுதான் உண்மை.

மார்க் 5 / 2.5