ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட். இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி. படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.
இப்படத்தைப் பற்றி காயத்ரி ரெட்டி கூறும்போது,
“இந்தப்படத்தின் புரொடக்சன் டீமில் இருந்து டெக்னிக்கல் டீம் வரைக்கும் அனைவருமே மிக நேர்த்தியாக செயல்படக் கூடியவர்கள். முக்கியமாக படத்தின் இயக்குநர் வினித் வரபிரசாத் எங்கள் டீமிற்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். செட்டில் துளி குழப்பம் கூட இல்லாமல் பணியாற்றுவார். அவரது திரைக்கதை பல மேஜிக்கைப் படத்தில் நிகழ்த்தும். படம் பார்க்கும் போது அதை நீங்கள் உணர முடியும். மேலும் இந்தப்படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிக வலிமையானதாக இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
நான் காயத்ரி ரெட்டியாக இல்லாமல் கதாப்பாத்திரமாகவே மாறியதை நன்றாக உணர்ந்தேன். காரணம் அந்தக் கேரக்டரை அவ்வளவு. அழகாக வடிவமைத்திருந்தார் இயக்குநர். படத்தில் பல இடங்களில் என் கேரக்டர் எமோஷ்னலாக இருக்கும். நடிக்கும் போதும் டப்பிங் பேசும் போதும் அதை நான் உணர்ந்தேன். இந்த லிப்ட் படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் படம் வெளியான பின் கேரியரில் ஒரு நல்ல லிப்ட் கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்
ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார்.
ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…
தமிழ்நாடு முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (29.1.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள்…
சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க்…
”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” 69 வயதில் ஒரு மனிதன் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும்…
This website uses cookies.