October 16, 2021

கமல் பேச்சுக்கு க்கா… !- கெளதமி கடிதாசு

உலக நாயகன் என்ற பெயரெடுத்த நடிகர் கமல்ஹாசன் வாணி கணபதி என்பவரை 1978ல் திருமணம் செய்தார். பின்னர் 1988இல் விவாகரத்து பெற்ற. பின்னர் சரிகாவை காதலித்து அதே ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாகாசன் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் பணியாற்றி வருகின்றனர். அந்த சரிகாவை 2004ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின்னர் நடிகை கௌதமியுடன் கடந்த 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார் கமல். இந்நிலையில் தற்போது கமலை பிரிய உள்ளதாக கௌதமி தெரிவித்துள்ளார்.

kamal nov 1

இது குறித்து தன் பிளாக்-கில் அவர் பதிவிட்டுள்ள   ஓப்பன் கடிதத்தின் தமிழாக்கம் இதோ…

நானும் கமல்ஹாசனும் இனி இணைந்திருக்க போவதில்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க நேர்ந்துள்ளதை நினைத்து மனவேதனை அடைகிறேன். 13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த அதிர்ச்சிகரமான முடிவாக இதை கருதுகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது, மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.

உறவு ஒரு உறவில் உள்ளவர்களின் பாதைகள் பிரிந்துவிடும்போது சேர்ந்து இருக்க ஒன்று கனவுகளை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது உண்மையை ஏற்றுக் கொண்டு பிரிய வேண்டும். 2 ஆண்டுகள் இந்த இதயத்தை நொறுக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ள எனக்கு நீண்ட காலம் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுத்தது. அதன் பிறகே இந்த முடிவுக்கு வந்தேன். குற்றச்சாட்டு யார் மீதும் குற்றம் சுமத்துவதோ, என் மீது பரிதாபப்படச் செய்வதோ எனது நோக்கம் அல்ல. வாழ்வில் மாற்றம் இன்றியமையாதது. அனைத்து மாற்றங்களும் நாம் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது. முடிவு இது தான் என் வாழ்வில் எடுத்துள்ள மிகவும் கடினமான முடிவு.

ஏனெனில், முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவு.

சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே கமல்ஹாசனின் ரசிகையாக இருந்து, அதன் பின்னரும் அவரது திறமை மற்றும் சாதனைகளை நான் தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளேன். சவாலான நேரங்களில் எல்லாம் அவருக்கு பக்கதுணையாக இருந்ததை எனது மதிப்பிற்குரிய தருணங்களாக கருதுகிறேன். அவருடையை படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நிறைய கற்று கொண்டு, அந்தப் படங்களில் அவரது படைப்பாற்றல் சார்ந்த பார்வைக்கு பலம் சேர்த்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். இதுவரை அவர் புரிந்துள்ள சாதனைகளை எல்லாம் கடந்து, அவரது ரசிகர்களுக்காக அவர் மேலும் பல சாதனைகளை புரியவுள்ளார் என்பதை அறிந்துள்ளதால் அவரது அந்த வெற்றிகளுக்காகவும் வாழ்த்து தெரிவிக்க நான் காத்திருக்கிறேன்,

பல வகைகளில் ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனது வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் என் வாழ்க்கையின் இந்த தருணத்தில் நடப்பதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.கடந்த 29 ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.