நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.
ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் கூறியது …
“ஆனந்தம் விளையாடும் வீடு” படம் உருவாகி வரும் விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி கதையை என்னிடம் கூறியதுபோலவே, படத்தையும் மிக அழகாக செதுக்கி வருகிறார். குறிப்பாக சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்குபெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் துவங்கியுள்ளோம். குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதுவும், படப்பிடிப்பில் குடும்ப உறவைகளை போலவே பழகுவதும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
திண்டுக்கல் மக்களும் தங்கள் குடும்பத்தினரை போலவே படக்குழுவை கொண்டாடியது படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனும் நம்பிக்கையை கூட்டியுள்ளது. பொதுமுடக்கம் முற்றிலும் நீங்கிய பிறகு, செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் பொழுதுபோக்கு அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ரசிகர்களுக்கு இப்படத்தை தருவோம்.
இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்த் நடித்துள்ளது.
முன்னொரு காலத்தில் திரையுலகி டாப் ஆர்டிஸ்டுகளின் படத்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஆன்மீக படங்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தது.…
நம் நாட்டில் 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது இருப்பதாக தேசிய மகளிர்…
வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் இனிய தனிமையே” என்கிற…
ஜப்பான் ‘ஐ.ஜி.எஸ். 7′ என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான…
கோலிவுட் அல்லது பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் சினிமா ரசிகனைக் கூட மூளை இல்லாதவனாகவே யோசித்து கதை, திரைக்கதை எல்லாம் கோர்த்து…
முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய கலவரங்களினால் உந்தப்பட்டு, இஸ்லாமிய மதவெறியன் ஒருவனால் கொடூரமான கொலை முயற்சிக்கு உள்ளான சல்மான் ருஷ்டி மீண்டு…
This website uses cookies.