October 5, 2022

கங்கை நதி உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது!

நம் நாட்டிலுள்ள புனித நதிகளில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இவற்றில் கங்கை நதியானது வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று மூன்று உலகங்களிலும் பாய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதிலும் நம் இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மாநிலங்களில் பாயும், மற்றும் பலராலும் வழிப்பாட்டு பொருளாக கருதப்படும் கங்கைநதி உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக Nature Communications journalல் செய்தி வெளியாகியுள்ளது.

கங்கையின் மகத்து வம் குறித்து வால்மீகி முனிவர், “கங்கையே, எனக்கு பெரிய அரச பதவி வேண்டாம். உன் கரையில் உள்ள மரத்தில் கூடு கட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால் அதுவே போதும். அல்லது உன்னிடம் வாழும் ஓர் ஆமையாகவோ மீனாகவோ புழுவாகவோ ஜென்மமெடுத்தால் கூட போதும்’ என்கிறார்.

மகாபாரதம், “கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி கங்கை நீரில் தொட்டுக் கொண்டிருக்கும் வரை அந்த மனிதன் சொர்க் கத்திலே பெருமைப்படுத்தப்படுவான். புனித கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்’ என்கிறது.

மகாகவி காளிதாஸ், “கங்காதேவியே, எமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி புனித நீருக்குதான் இருக்கிறது’ என்கிறார்.

“கங்கையே, மூன்று உலகங்களுக்கும் ஆதாரம் நீ. நீயே எனக்கு சம்சாரத்தைக் கடக் கும் வழியாக இருக்கிறாய். யாருடைய இதயத் தில் கங்கை மீது பக்தி இருக்கிறதோ அவர் களுக்கு முக்தி எளிது’ என்கிறார் ஆதிசங்கரர்.

மகாகவி பாரதியார் காசியில் அனுமன் காட் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தன் மாமன் வீட்டுக்குச் செல்லும்போது நாஸ்தி கனாக இருந்தார். அவர் கங்கை நதியில் நீராடிய பின், அதன் சக்தி பாரதியாரை ஆஸ்திகனாக மாற்றிவிட்டது என்று வரலாறு சொல்கிறது. அவர் கங்கை நதியைப் புகழ்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே.

கங்கை நதி சாதாரண நதி அல்ல. அந்த நதி முழுவதும் புனிதமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான ரசாயனக் கலவையாகும். மற்ற நதி நீரை சேகரித்து வைத்தால் கெட்டு விடும். புழு, பூச்சிகள் ஏற்படும். ஆனால், கங்கை நீர் கெடாது. ஒரு செப் புக்கலசத்தில் கங்கை நீரை சேகரித்து நன்றாக மூடி வைத்துவிட்டால் வருடக்கணக்கில் கெடாது. மேலும், சாதாரணமாக எலும்பு கள் தண்ணீரில் கரை யாது. ஆனால் கங்கை நதியில் இடப்படும் எலும்புகள் கரைந்து விடும். ஆகையால்தான் காசியில் மணிகர்னிகா காட்டில் தகனம் செய் யப்படும் சடலங்களின் எலும்புகள் கங்கை நதி யில் இடப்படுகின்றன. சாதுக்கள், பிரம்மச்சாரி கள், குழந்தைகளின் சடலங்களை தகுந்த முறை யில் பூஜித்து துணியில் சுற்றி கங்கை நதியில் விட்டுவிடுவார்கள். சில நாட்களில் அவை கரைக் கப்பட்டு நீருடன் கலந்துவிடும். அதனால்தான் கங்கை நதியில் பிணங்கள் மிதப்பதில்லை. கங்கை நதிக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

எங்கே வசித்தாலும் கங்கையின் பெயர் சொன்னால் போதும்- எல்லா பாவங்களும் அகலும்; புனிதம் சேரும். பொதுவாக நீராடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

கங்கா கங்கேதியோ ப்ரூயாத்
யோஜனானாம் சதைரபி
முச்யதேசர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் சச்சதி.

இத்தனை பெயர்களையும் புகழையும் புனிதத்தையும் பெற்ற கங்கையானவள் தற்போதைய உலகில் பாயும் நதிகளிலே அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதுதான் சோகம். 2007 வெளியான பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த கங்கை நதி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. 2014ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்த திட்டங்களில் மிக முக்கியமான திட்டம் கங்கை நதியைச் சுத்தம் செய்யும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன் கங்கை நதியைச் சுத்தம் செய்ய பத்து வருடங்கள் எடுக்கும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிந்திருந்தார்.

கங்கை நதியைச் சுத்தம் செய்ய 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கங்கை நதியைச் சுத்தம் செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு ஆண்டும் 10.5 கோடி கிலோ அளவில் பிளாடிக் குப்பை கங்கை நதியில் கலக்கிறது.

இந்தக் குப்பைகளை மட்டும் அள்ளுவதற்கு சுமார் 1 லட்சம் குப்பை லாரிகள் தேவைப்படும் எனவும் தெரிகிறது. இந்தப் பட்டியலில் சீனாவில் யாங்சி நதி முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 30 கோடி கிலோ அளவில் குப்பை யாங்சி நதியில் கலக்கிறது. கடலில் சேரும் குப்பைகளில் மூன்றில் இரண்டு பங்கு உலகிலுள்ள நதிகள் மூலமாகவே கடலில் கலக்கப்படுகின்றன. இந்த நதிகளில் பெரும்பாலானவை ஆசிய கண்டத்தை சேர்ந்தது.