கஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா?

கஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா?

கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு கோரும் தகவல்களை வழங்க மாநில அரசு தாமதிக்க வில்லை என்று ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. இதனை யடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது. மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்கள் ஆய்வு பணியை மேற்கொண்டது.

ஆனால் இதுவரை மத்திய குழு தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இது தொடர் பான நடக்கும் வழக்கில் கஜா புயல் பாதிப்பு அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாக, தமிழக அரசிடம், மத்திய குழு சில விளக்கங்களை கேட்டுள்ளது என ஐகோர்ட் மதுரை கிளையில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, கஜா பாதிப்பு தொடர்பான மத்திய அரசு குழுவின் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய ஏன் காலதாமதம் ஆகிறது என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தாங்கள் கோரிய தகவல்களை தராமல் தமிழக அரசு தான் தாமதிப்பதாக குற்றம்சாட்டினார். இந்தநிலையில் மத்திய அரசு கோரும் தகவல்களை கொடுக்க மாநில அரசு தாமதிக்கவில்லை என்று கூறிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், கஜா புயல் பாதிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் இன்றே தர தயார் என்று தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!