இன்னும் சில ஆண்டுகளில் ரோபோ கூட செக்ஸ் வச்சுக்கற ட்ரெண்ட் அதிகரிக்கப் போகுதாம்!

மனிதர்களுக்கு பல வழிகளிலும் உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டவை தான் ரோபோக்கள். அறிவியல், விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறையிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பாலியல் உறவுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைவு.. 2050 ஆண்டளவில் மனித உறவை மிஞ்சும் அளவுக்கு ரோபோக்கள் உறவில் ஈடுபடுத்தப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

sex sep 7 a

இன்றையக் காலக்கட்டத்தில் செல்போனை போலவோ, கம்ப்யூட்டரை போலவோ ரோபோக்கள் எதிர்காலத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிடும். அதாவது எந்திரன் படத்தில் அழகான ஐஸ்வர்யாவைப் பார்த்து காதல் கவிதை எழுதும் ரோபோ சிட்டி போல, இனி ரோபோக்கள் காதல் வயப்படும் என்பது விஞ்ஞானிகள் கருத்தாகும். போக்களுடன் மனிதர்களுக்கு ஏற்படும் காதலுக்கு ரோபோபிலியா (Robophilia) என்று பெயரும் வைத்துவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள். என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்

ரோபாடிக் செக்ஸூவல் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் உருவாகும் ரோபோ பார்ட்னருடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறவருக்கு, நிஜ பார்ட்னருடன் உறவில் ஈடுபடுகையில் ஏற்படுகிற அனுபவம் அப்படியே கிடைக்குமாம். மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் இல்லாத வகையில் இது ப்ரோக்ராம் பண்ணப்பட்டிருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ரெடிமேட் பார்ட்னர்

செக்ஸ் டால் விற்பனையாவது போலவே, இதுபோன்ற செக்ஸ்டெக் பார்ட்னரையும் இணையதளங்களில் வாங்கும் வாய்ப்பு 2070ம் ஆண்டு சாத்தியமாகலாம் என்கிறார் லண்டனை சேர்ந்த பாலியல் மனநல நிபுணர் டிரிஸ்கால். அதுவும் நிஜ பார்ட்னரை போல தீய பழக்கங்கள் இருக்காது, சொன்னதைக் கேட்கும், சண்டைகள் வராது போன்ற காரணங்களுக்காகவும் ரோபோ பார்ட்னரை எதிர்காலத்தில் பலரும் விரும்பக் கூடும். நிஜ வாழ்வில் பார்ட்னர் மீது வைத்திருக்கும் அன்பை விட, இன்னும் அதிகமான அன்பு இந்த ரோபோக்கள் மீது மனிதர்களுக்கு ஏற்படும் என்கிறார் டிரிஸ்கால்!

மனிதர்களுடன் ரோபோக்கள்

அதேபோல பியர்சன் என்ற விஞ்ஞானி, செக்ஸின் எதிர்காலம் குறித்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தற்போது சர்வசாதாரணமாக பெண்கள் ஆபாசப் படம் பார்ப்பது போல் எதிர்காலத்தில் ரோபோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் நிலை உருவாகும் என கூறியுள்ளார். ஆணுடனான செக்ஸை விட ரோபோக்களுடன் செக்ஸ் கொள்ளும் ‘ரோபோபிலியா’ வருகிற 2050ஆம் ஆண்டுக்குள் முழுவீச்சில் பிரபலமாகும் என்று அந்த விஞ்சானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பியர்சன் வெளியிட்ட அறிக்கையில், நிறைய பேர் ரோபோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர்.

காரணம் மனிதர்கள் படிப்படியாக ரோபோக்களின் செயற்கை நுண்ணறிவு, இயந்திர செயல்பாடுகள், மற்றும் அதனுடனான உணர்சிகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் முதலில் நண்பர்களாக்கிக் கொண்டு, பின்னர் உணர்ச்சிகளை வலுவாக்கி அதனுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதிலும் செக்ஸ் தேவையை எல்லா வகையிலும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ரோபோக்கள் செயல்படும். பயன்பாட்டுக்கு பிறகு முழுவதுமாக ஸ்டெரிலைஸ் செய்யப்படும் என்பதால் எய்ட்ஸ், எச்ஐவி பரவும் அபாயம் முழுவதுமாக தவிர்க்கப்படுமாம்.

மிஷிந்தனமாகி விட்ட மனித உறவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாகி வருவதும், தனிமை உணர்வும் சேர்ந்து மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. மன அழுத்தத்தைத் தவிர்க்க ஏதோ ஒரு விஷயத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்கள். இனி திட்டாத, சண்டை போடாத ரோபோக்களுடன் வாழ்க்கை நடத்த தயாராகி விடுவார்கள் மனிதர்கள். குறிப்பாக நிஜ வாழ்வில் சக மனிதர்களுடன் பேசாத, பழகாத மனிதர்கள் முகம் தெரியாத ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டரில் பலருடன் அன்பு பாராட்டுவதையும், சண்டை போடுவதையும், கிட்டத்தட்ட அவர்களுடனே வாழ்ந்து வருவதையும் பார்க்கிறோம். இந்த மனநிலைதான் எதிர்காலத்தில் ரோபோ பார்ட்னரிடம் நம்மைக் கொண்டு சேர்க்கப் போகிறது என்பதுதான் உண்மையாம்.

இதுகுறித்து ரோபோ வல்லுநரான ஜோயல் சினல் மனிதர்கள் ரோபோக்களுக்கு அடிமையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்.தங்கள் ஆசைகளுக்கு ஏற்றவாறு ரோபோக்களை வடிவமைத்துக் கொள்ளலாம் என கூறும் ஜோயல் சினல் விரும்பும் நேரத்தில் உறவு வைத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=JyJW7vfmjjI

மேலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாகிவரும் ரோபோக்களால், பாலியல் தொழில் சம்பந்தப்பட்ட மனிதக்கடத்தல்கள் குறைந்து விடும் என்பதுடன் ரோபோ பெண்களால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படாது.உறவுக்கு பின்னர் முழுவதுமாக ஸ்டெரிலைஸ் செய்யப்படும் என்பதால் எய்ட்ஸ், எச்ஐவி பரவும் அபாயம் முழுவதுமாக தவிர்க்கப்படும். எது எப்படி இருந்தாலும், இது மனித உறவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாவதையே காட்டுகிறது என்பதுதான் சோகமான உண்மை.