52 நாடுகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய ஒரு தனி மனிதர் – பிரிட்ஜோப் நான்ஸன்!

52 நாடுகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய ஒரு தனி மனிதர் – பிரிட்ஜோப் நான்ஸன்!

10/10/1861இல் நார்வேயில் பிறந்தவர்தான் பிரிட்ஜோப் நான்ஸன் [Fridjof Nansen] உலகின் தலை சிறந்த எக்ஸ்ப்ளோ ரர், கடல் மற்றும் பிராணி ஆராய்ச்சியாளர், ஓவியர் என பன்முக திறமை கொண்ட ஒரு மேதை. அதையும் தாண்டி இவரை பற்றி சொல்வதென்றால். இந்த உலகில் எந்த நாடு அடிமைப்படுத்தப்பட்டாலும் அந்த நாடு என் நாடு என்ற சேகுவேரா போல். இவர் உலகில் அன்று பிரிட்டிஷ், ஃப்ரென்ச், ரஷ்ய என்று பல நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் இவர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது.1888 ஆம் ஆண்டு. இவர் பனி  பிரதேசமான க்ரீன் லான்டை வடக்கிலிருந்து, தெற்க்காக கடந்தார். தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, மருத்துவம் என்று எந்த வசதியும் இல்லாத அக்காலத்தில் இரண்டு மாதங்கள் வரை அட்லான்டிக்கில் தங்கி இந்த சாதனையை செய்தார். அந்த சமயத்தில் தான் இவர் அரிய  வானிலை தகவல்கள், பூமியின் காந்த புலன்கள், துருவ பிரதேசங்கள் என்று யாருமே அறியாத பல விஷயங்களை அறிந்தார். இத்தகவல்கள் பிற்காலத்தில் பெரும் பொக்கிஷங்களாக கருதப்பட்டன.

அதன்பிறகு வட துருவத்திற்கு செல்ல அவர் திட்டமிட்டார். அதற்க்கு என்றே நீர், பணி பாளங்கள். இரண்டின் மீதும் பயணிக்க கூடிய ஒரு விசேஸ கப்பலை தனது கையாலேயே வடிவமைத்தார். அந்த கப்பலுக்கு நான்சன்னின் மனைவி பிராம் என்னும் பெயரை வெய்த்தார். நார்விய மொழியில் பிராம் என்றால் முன்னேறு என்று அர்த்தம். 12 மாலுமிகளுடன் 1893 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடர்ந்தார். பல மாதங்கள் பயணம் செய்தும் அவரால் பூமியின் வட துருவத்தை நெருங்கவே முடியவில்லை. உடன் வந்த அனைவரும் சோர்ந்தனர். சிலர் உடல் நிலை கவலைக்கிடமாக ஆனது. பின்னர் அவர்கள் அனைவரையும் வந்த வழியே திரும்பி போக சொன்னார். கப்பலிலிருந்து இறங்கி. தன்னை போலவே உடல், மன வலிமை கொண்ட ஒருவரை மட்டும் அழைத்து கொண்டு. ஸ்லெட்ஜ் வண்டியுடனும், மூன்று நாய்களுடனும் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அவர் கப்பல். வட துருவத்திலிருந்து 360 மைல் துரத்தில் நின்றிருந்தது. ஒரு மாதம். 200வது மைல் வரை நடந்தே வந்து சேர்ந்தார். உணவும், குடி நீரும் இல்லாத அக்காலத்தில் இப்பயணம் மரணத்தை காட்டிலும் கொடியது. டிஸ்கவரீ தொலைக்காட்சியில் வரும் Man Vs Wild உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள். இன்றைய நவீன மருத்துவ தொழில் நுட்ப யுகத்தில் கூட Bear Gryll அத்தகைய சாகசங்களை செய்வது ஆச்சர்யம் என்றால். இன்று உள்ள எதுவுமே இல்லாத அக்கால கட்டத்தில் நான்சன் செய்த அந்த பயணத்தை என்னவென்று சொல்வது. அதற்க்கு முன் எந்த ஆராய்ச்சியாளரும் வட துருவததிற்கு இவ்வளவு அருகில் வந்தது இல்லை. அங்கு அவர் கடல் நீரோட்டங்கள், பணி பாறைகள் சம்பந்தமாக பல குறிப்புகளை எடுத்து கொண்டார். அப்பொழுது மழை குளிர் காலமும் வந்து விடவே தனது கைகளாலேயே அங்கு கிடந்த பாறைகளால் தங்க ஒரு வீடு அமைத்து கொண்டார்.

அவரின் நண்பர், மூன்று நாய்கள் அங்கேயே பல மாதங்கள் அடைந்து கிடந்தனர். நான்சன் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவர் உடன் பயணித்த 12 மாலுமிகளும் அவர் இறந்து இருக்கலாம் என்று நினைத்தனர். ஓட்டு மொத்த நார்வேயும் அவ்வாறே எண்ணிய நேரத்தில். 1896 வட துருவததிற்கு சென்ற வேறொரு பிரிட்டிஷ் ஆய்வு குழு. அவர்களை கண்டறிந்து. நார்வே நாட்டிற்கு மீண்டும் அழைத்து வந்தது.

1905 நார்வே ஸ்வீடன் நாட்டிடம் அடிமைப்பட்டு கிடந்தது. சுதந்திர போராட்டத்திற்கு தலைமை தாங்கி நாட்டிற்கு உடனடியாக விடுதலையும் வாங்கி தந்தார். நமது நாட்டு துராத்மாக்களை போல் போலி அகிம்சை, கத்தரிக்காய் எல்லாம் இல்லாமல் அகிம்சை பாதி, அதிரடி பாதி இரண்டும் கலந்து செய்த கலவையாக அவர் போராடினார். இவரை போன்ற ஒரு மாவீரர் உள்ள நாட்டை அடிமைப்படுத்த முடியுமா என்ன?

நார்வே விடுதலை பெற்ற பின்னர் நான்சன் அரசியல் அரங்கிலும் அசைக்கமுடியாத ஒரு அரியாசனத்தை பெற்றார். முதல் உலக போர் முடிவடைந்த சமயத்தில் ஏராளமான படை வீரர்கள் ரஷ்யாவில் போர் கைதிகளாக இருந்தனர். இன்று ஐ.நா. சபை போல் அன்று லீக் ஆஃப் நேசன்ஸ் என்ற அமைப்பு இருந்தது. அந்த அமைப்பால் கூட ரஷ்யாவிடம் இருந்த படை வீரர்களை விடுவிக்க முடியாத சமயத்தில் நான்சன் தனி ஒரு மனிதனாக பேசி. பட்டினியாலும், கடும் குளிராலும் சிறுக, சிறுக செத்து கொண்டிருந்த நான்கு லக்ஷசத்தி இருபத்தி ஏழாயிரம் வீரர்களை விடுதலை செய்தார். அன்று பல பெரிய அமைப்புகள், நாடுகள் என பலவற்றால் முடியாததை தனி ஆளாக செய்த One Man ARMY Fridjof Nansen.

மேலும் ரஷ்யாவில் நடைபெற்ற மிக மோசமான போல்ஷ்விக் புரட்சியால் பல்லாயிரம் மக்கள் யுரோப்பின் பல பகுதிகளுக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அந்த மக்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அதுவே நான்சன் பாஸ்போர்ட் என்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களை பல்வேறு யுரோப் நாடுகளுக்கு குடியமர்த்தி அவர்களுக்கு வேலை, உணவு அனைத்தும் கிடைக்க செய்தார். இங்கு தமிழ், தமிழ் என்று கத்துபவர்கள். இலங்கை அகதிகளின் வாழ்வாதாரங்களுக்கு எதுவுமே செய்யாமல் கைதிகள் போல் அவர்களை கூண்டில் அடைத்து சோறு போடுகிறார்களே. அது போல் செய்யாமல் அந்த 52 நாடுகள் அவர்களை கௌரவமாக நடத்தியது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால். அந்த சான்றிதழில் எந்த வித அரசு முத்திரையும் இல்லை. நான்சனின் மார்பளவு புகைப்படம் மட்டுமே. இதை வெய்த்து இருப்பவர் நம்முள் ஒருவர், அகதியாய் வந்தவர், அவரை காப்போம் என்கிற வாசகம் மட்டுமே. அதன்மூலம் ஒண்டரை லக்சம் மக்களுக்கு மறு வாழ்வு கிடைத்தது என்றால் அது எவ்வளவு பெரிய விசயம். இவர் பெற்ற விருதுகளும் பல. நோபல் முதல் இவர் பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளது. இவர் எழுதிய சுய சரிதையை தவிர்த்து.

Farthest North, The First Crossing of Green Land, Armenia and the near East, The Archtic Exploration Anthology என்று பட்டியல் நீள்கிறது. ஹூம்..சேகுவேரா சட்டை போல் இவர் சட்டையையும் விற்பனைக்கு கொண்டு வருதல் இந்த மாமனிதருக்கு நாம் செய்யும் ஒரு கௌரவம் என்பதும் இவர் படம், புத்தகம் நமது ஒவ்வோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று என்பதும் எப்போது எல்லோரும் உணர்வார்களோ!.

இன்றைய கூகுள் டூடுள் அவரை நினைவுப் படுத்தி உள்ளது!

error: Content is protected !!