பிரான்ஸ் அதிபர் தேர்தல்: மேக்ரான் மீண்டும் போட்டி : புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு!

பிரான்ஸில் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தோ்தலில், தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரான் மீண்டும் போட்டியிடுகிறார். தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மேக்ரான் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய மரீனே லீ பென் அதிக ஆதரவைப் பெற்றுள்ளார். முந்தைய தோ்தலைவிட இந்தத் தோ்தலில் மேக்ரானை எதிா்த்து போட்டியிடுவோர் அதிக பலம் பெற்றிப்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தத் தோ்தலில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போதைய தோ்தலில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்கவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளா்களுக்கு இடையே வரும் 24-ம் தேதி இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் நாட்டின் அடுத்த அதிபராகப் பெறுப்பேற்பார். இந்தத் தோ்தலைத் தொடா்ந்து, பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான தோ்தல் வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தற்போது பிரெஞ்ச் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் இரு இடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 8 மணியளவில் தேர்தல் தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்தனர். அவர்கள் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்காக அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.