September 20, 2021

தமிழகத்தில் ஃப்ரீ வைஃபை சேவை! -அண்ணா பிறந்த நாள் முதல் அமல்?

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அங்கு இந்த ஆண்டுக்குள் இலவசமாக வைஃபை இண்டர்நெட் வசதியுடன் கொண்ட நூறு நவீன கழிவறைகளை அதிகளவில் கட்டுவதற்கு பீஜிங் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டோங்சோ, பாங்சான் மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த வைஃபை கழிவறைகள் நிறுவப்படுகிறது. இதுதவிர,  இந்நகரத்தில் ஆங்காங்கே ஏ.டி.எம் இயந்திரங்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தித்தர திட்டமிடப்பட்டுள்ளது.அதேபோல், கழிவறைகளுக்கு அருகிலேயே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்காக ’பேபி சிட்டிங்’ வசதியும் செய்து தரப்படவுள்ளது. ஒவ்வொரு கழிப்பறையும் சுமார் ஒரு லட்சம் யுவான் திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

wifi july 11

பொது இடங்களில் அனைவருக்கும் இலவச வைஃபை சேவை அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு, செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இச்சேவையை, முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைமை பேருந்து நிலையம், பூங்காக்கள் மற்றும் ஷாப்பிங் வளாகங்களில் அமல்படுத்த திட்டமிட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அதற்கான நிறைவேற்ற பணிகளை தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் முதல் இலவச ‘வை-பை’ வசதியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரிகள், “அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முதல் கட்டமாக 32 மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் இலவச ‘வை-பை’ வசதியை தொடங்க முடிவு செய்துள்ளது.பொதுமக்கள் கூடும் பஸ்நிலையம், பூங்காக்கள் மற்றும் அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் தொடங்கப்படும்.

இந்த திட்டத்தை செயல் படுத்த ஏஜென்சிகளிடம் இருந்து டெண்டர் கோரப் பட்டுள்ளது. இதற்கான உபகரணங்கள், சர்வர், டேட்டா போன்றவற்றை வழங்க கூடிய ஏஜென்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான டெண்டர் ஆகஸ்டு 2-வது வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். இந்த திட்டம் மாவட்ட தலைநகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு அடுத்த ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்படும்.இந்த திட்டத்தை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படு” என்றனர்.

இப்படி இலவச வை-பை பொது மக்களுக்கு வழங்கப்படும். அதேவேளையில் சில கட்டுப்பாடுகளை அரசு கேபிள் நிறுவனம் விதிக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வை-பை வசதி இலவசமாக கிடைக்கும்.வை-பை வசதியை குறிப்பிட்ட ஒரே இடத்தில் இருந்து அதிகளவு பயன்படுத்தாதபடி இத்திட்டத்தை செயல்படுத்தவும் அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டுள்ளதாம்.