August 15, 2022

பூஸ்டர் டோஸ் அனைவரும் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம்!

நாட்டில் உள்ள 18 முதல் 59 வயதுள்ள 77 கோடி மக்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.60வயதுக்கு மேற்பட்டவர்களில் 26 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுதவிர மருத்துவ, சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில் ஜூலை 15-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பூஸ்டர் டோஸ் அனைவரும் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் ஈன மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி முதல் 18 – 59 வயது உள்ளவர்களுக்கும் போஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஜூலை 15-ம் தேதி முதல் செப். 28-ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அரசு தெரிவித்துள்ளது.