100 யூனிட் ஃப்ரீ கரண்ட் உங்களுக்கு இப்போ கிடைச்சிருக்காதே!?

100 யூனிட் ஃப்ரீ கரண்ட் உங்களுக்கு இப்போ கிடைச்சிருக்காதே!?

தமிழக அரசு அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான கட்டணச் சலுகை எப்போது முதல் அமலாகும் என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

eb july 7

அனைத்து மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் கட்சியின் பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.தேர்தலில் வெற்றி பெற்று, மே 23-ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பதவியேற்றதும், 100 யூனிட் மின்சாரத்துக்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி, மே 23-ஆம் தேதி முதல் எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்சாரப் பயன்பாட்டுக்கான கட்டணச் சலுகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று பல்வேறு குழப்பங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக, ஒரு நுகர்வோரிடம் மே 30-ஆம் தேதி மின்சாரப் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டால், அவருக்கு சலுகை முழுவதுமாக கிடைக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் மின்நுகர்வோருக்கு உள்ளது.

கணக்கீட்டு முறை: மின்சார வாரியம் 0 – 200, 201 – 500, 501 – 1100 வரை என்று மூன்று பிரிவுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கிறது. புதிய சலுகையின்படி கடந்த இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் மட்டும் வரை பயன் படுத்தியிருந்தால் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள்,”ஆணை பிறப்பிக்கப்பட்ட (மே 23) தேதியிலிருந்து 1 மாதம் கழித்து மின்சாரம் கணக்கெடுக்கப்பட்டால் 50 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும். உதாரணமாக கட்டணச் சலுகை ஆணை பிறப்பிக்கப்பட்ட மே 23-ஆம் தேதிக்குப் பிறகு, 10 நாள்கள் கழித்து மின்சாரம் கணக்கெடுக்கப்பட்டால், ஒரு மாதத்துக்கு 50 யூனிட் என்றால் 10 நாள்களுக்கு எத்தனை யூனிட்டுக்கான கட்டணத்துக்குச் சலுகை என்ற விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு சலுகை அளிக்கப்படும்” என்றனர்.

2 மாதம்: கட்டணச் சலுகை அறிவிப்புக்கு (மே 23) பிறகு, தொடர்ந்து 2 மாதங்கள் முழுமையாக மின்சாரம் பயன்படுத்திய நுகர்வோருக்கு மட்டுமே முழுவதுமாக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இடையில் உள்ள சில நாள்களுக்கான கணக்கீட்டு கட்டணச் சலுகை குறித்த சந்தேகங்களை அந்தந்த மின்சார அலுவகத்தின் உதவிப் பொறியாளரிடம் நுகர்வோர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.இதுவரை 28 லட்சம் பேர்: 100 யூனிட் மின் கட்டணச் சலுகை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் (மே 23) முதல் இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சலுகைக் கட்டணம் கிடைப்பது உறுதியாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. உதாரணமாக, இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும். ஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உபயோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.

அதுபோல 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.
.
750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.
.
2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உபயோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.
.
அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும்.75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்.
.
400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும்.

100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.
.
500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும்,300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும்
ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.

200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும்,740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.
.
7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.

இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது

Related Posts

error: Content is protected !!