பிரான்ஸ் :ஐரோப்பிய யூனியனின் தலைவர் பொறுப்பை ஏற்றது!

பிரான்ஸ் :ஐரோப்பிய யூனியனின் தலைவர் பொறுப்பை ஏற்றது!

ரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 17 நாடுகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் தலைவர் பொறுப்பை மேற்கொள்வார்கள். அதன்படி ஐரோப்பிய யூனியன் தலைவர் பொறுப்பை பிரான்ஸ் ஜனவரி மாதம் முதல் தேதியன்று ஏற்றுக்கொண்டது. தலைவர் பொறுப்பு பிரான்ஸ் நாட்டுக்கு மாற்றப்பட்டதை குறிக்கும் வகையில் ஸ்லோவாகியா அரண்மனையும் பிரான்ஸ் நாட்டவரும் நீல வண்ண விளக்குகளால் முதல் தேதி அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தன.

ஐரோப்பிய யூனியன் தலைவர் பொறுப்பு பிரான்ஸ் நாட்டுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஆறு மாத காலத்தில் பிரான்ஸ் எப்படி இயங்கும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேட்டி அளித்தார். தன்னுடைய புத்தாண்டு செய்தியில் இந்த தகவலை வெளியிட்டார் முழு கவனத்துடன் தனது பொறுப்பை உணர்ந்து பிரான்ஸ் இயங்கும். 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் கைக்கு ஐரோப்பிய யூனியன் தலைவர் பொறுப்பு கிடைக்கிறது

அதை முழு அளவில் பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியன் எல்லைகளை காப்பாற்றவும் பருவநிலை மாற்றத்தில் நமது பங்கினை உருப்படியான திட்டங்கள் மூலம் உறுதி செய்யவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவம் மேலோங்கவும் பாடுபடுவோம் ஆபிரிக்க நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன் இணைந்து செயல்படுவதற்கான செயல்திட்டங்கள் அமுல் செய்யப்படும் இணையதளம் மூலமாக இயங்கும் வெளிநாட்டு அமைப்புகளை கண்காணிக்க முழு அளவில் பாடுபடுவோம் என்றும் கூறினார்.

error: Content is protected !!