Exclusive

பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையை விடிய விடிய முடக்கிய Foxconn பெண் ஊழியர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லியில் Foxconn கம்பெனி விடுதியில்  தங்கவைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஃபுட் பாய்சன் ஆகி 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை எனப் பல இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து திரும்பிய நிலையில், எட்டு பெண்களுடைய நிலை என்னவென்று தெரியவில்லை.

இதனைக் கண்டித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 9 மணி நேரமாக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது.

இந்தப் போராட்டம் காரணமாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நிற்கின்றன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிலிருந்து அனைத்து அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டுவரும் பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதில் சமரசம் எட்டப்படவில்லை. இன்னும் சற்று நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாகச் செங்கல்பட்டு சாலையில் இருக்கக்கூடிய புளியம்பாக்கம் என்ற இடத்திலும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல் தாம்பரம் செல்லும் வழியில் உள்ள வடகால் எனும் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “உணவு விஷமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறோம். இருந்தபோதிலும் அவர்கள் சமாதானம் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

aanthai

Recent Posts

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

“உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என…

23 hours ago

“ 1947 ஆகஸ்ட் 16” திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது!

நம்மைப் பெருமைப்படுத்தும் ஒரு காலகட்டத்தின் கதை! ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டது.…

24 hours ago

பரியுடைமை (Freedom) உடைக்கப்பட்டு இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட ஊடகவியலாளரின் மகள் நான்…மெஹனாஸ் கப்பன்!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த அக்டோபர் மாதம் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இது…

24 hours ago

“விதியோடு ஒரு ஒப்பந்தம்”!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு…

1 day ago

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி!- முழு விபரம்!

நம் நாட்டில் பாலின சமத்துவமின்மை குறைந்து வருகிறது, சமூக அரசியல் செயல்பாடுகளில் அதிகரித்துவரும் பெண்களின் பங்கெடுப்பு தீர்மானிப்பவையாக உள்ளது. நாட்டின்…

1 day ago

இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த “விடுதலைத் திருநாள் நல்வாழ்த்து”.!

பெருவெளியின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் மிகச்சிறிய வன்தான், ஆனால் அவன்தான் பேரண்டத்தை எதிரொலிக்கிற கண்ணாடி, அழகுற அதனை சித்தரிக்கும் கவிஞன்,…

2 days ago

This website uses cookies.