Exclusive

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் 4 நட்சத்திர அந்தஸ்து ஜெனரலான முஷாரப், 1999இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் ஆட்சிக்கு வந்தார். தொடர்ந்து, அவர் அக்டோபர் 1999 முதல் நவம்பர் 2002 வரை பாகிஸ்தானின் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானின் பத்தாவது அதிபராக பதவியேற்றார். 2001 முதல் ஆகஸ்ட் 2008 வரை பதவியில் தொடர்ந்தார்.ஆனால் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் முஷாரப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அதை அடுத்துஅவர் மார்ச் 2016 முதல் துபாயில் வசித்து வந்தார், மேலும் 2007 இல் அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததற்காக தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், முஷாரஃப்பின் குடும்பம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெளிவுபடுத்தியது, முஷாரஃப் அமிலாய்டோசிஸ் நோயின் சிக்கலால் மூன்று வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ஒரு அரிதான பாதிப்பு ஆகும்.  இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

aanthai

Recent Posts

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தடை இல்லை : ஐகோர்ட் தீர்ப்பு!

அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை…

4 hours ago

இந்தியாவில் 27.73 கோடி ஊழியர்களின் பி. எப் சேமிப்பு பணத்துக்கு ஆபத்து?

இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் அதானியால் குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்…

23 hours ago

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர சம்பளப் புதுப் பட்டியல்!

இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது,…

1 day ago

யார்., யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை?- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த…

1 day ago

இஸ்ரோவின் எல்.வி.எம்., 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி…

1 day ago

கருத்துரிமையில் அவதூறு செய்யும் உரிமையும் அடங்கும்!

கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அவர் செய்தது தவறு என்று பாஜக அபிமானிகள்…

2 days ago

This website uses cookies.